சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சூப்பர் ஸ்டாரை நம்பினால் வேலைக்கு ஆகாது… சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்த இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறார். இதில் சில இயக்குனர்களுடன் மீண்டும் படம் பண்ணலாம் என்ற வாக்கை கொடுத்து இருக்கிறார். சமீபத்தில் கூட ரஞ்சித்துடன் படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Also Read: அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து விட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து அடுத்து படம் பண்ணலாம் என்று ரஜினி கூறியிருந்தார். இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி திடீரென்று நெல்சனை அழைத்து வாய்ப்பு கொடுத்து விட்டார்.

இந்த வரிசையில் காத்திருந்தர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர் அடுத்து ஜிகர்தண்டா என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படத்தை பார்த்து விட்டு தான் ரஜினி கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்தார்.

Also Read: அண்ணாத்த படம் நாசமாய் போனதற்கு காரணம் இவங்கதான்.. சர்ச்சையை கிளப்பி விட்ட பிரபலம்

கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினியின் 165 ஆவது படமாக இவர்கள் கூட்டணியில் உருவான பேட்ட படம் அமைந்தது. இந்த படத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சமுத்திரக்கனி நடித்திருந்தனர். இந்த படம் வற்றி அடைந்ததை அடுத்து ரஜினி கார்த்திக்கிடம் அடுத்து படம் பண்ணுவோம் என்று கூறியிருந்தார். ஆனால் ரஜினியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

கார்த்திக் சுப்புராஜும் காத்திருந்து பார்த்து விட்டு தன்னுடைய முதல் ஹிட் படமான ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஜிகர்தண்டா 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்திருந்தனர்.

Also Read: ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த மாஸ் ஹீரோ.. கடைசிவரை பண்ணாத நெகட்டிவ் கேரக்டர்

Trending News