வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இனி தனியா, கெத்தா நான் தெரியணும்.. பல லட்சம் செலவு செய்து கார்த்திக் எடுக்கும் புது அவதாரம்

Actor Karthi: நடிகர் கார்த்தி நிறைய பெரிய இயக்குனர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து, வெற்றியும் பெற்று வருகிறார். இருப்பினும் அண்ணனை விட இனி தனியாக கெத்தா நான் தெரியனும் என்று பல லட்சம் செலவு செய்து புது அவதாரத்தை எடுக்கப் போகிறார். ஏனென்றால் அண்ணன் சூர்யாவிற்கு கிடைக்கிற மரியாதை தனக்கு பொது இடங்களில் கிடைப்பதில்லை என்பதை கார்த்தி நினைத்து கவலைப்படுகிறார்.

இதை நாம் பல நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிந்தது. ஒருமுறை கார்த்தி, சூர்யா இருவரும் நடத்தி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை விழா நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் மாணவ மாணவிகளை அழைத்து கௌரவப்படுத்தினர். மேடையில் வந்த மாணவ மாணவிகள் சூர்யாவிற்கு மட்டும் கை கொடுத்துவிட்டு பக்கத்தில் நிற்கும் கார்த்தி கை நீட்டினாலும் கை கொடுக்காமல் சென்று விட்டனர்.

Also read: நடிப்பு இல்லைனாலும் பட வாய்ப்புக்கு மட்டும் குறைச்ச இல்ல.. வாரிசு நடிகை என்பதால் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு

இது போன்ற பல சம்பவங்கள் கார்த்திக்கு நிகழ்ந்ததால் இனி எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டால் தனக்கு மரியாதை கிடைக்கும் என்பதற்காக புதிதாக ஒரு பிளான் போட்டு இருக்கிறார். கார்த்திக்கு உச்ச நட்சத்திரங்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதை போல் இவருக்கும் இருக்க ஆசை. ஆனால் அதைச் செய்ய முடியவில்லை.

இதனால் இவர் பல லட்சம் சம்பளம் கொடுத்து ஒரு குழுவை தன்னை வழிநடத்த வைத்துள்ளார். அந்தக் குழுவினர் சொல்வது போல தான் நடக்க வேண்டும், பேச வேண்டும், சாப்பிட வேண்டும், உடை உடுத்த வேண்டும். யாரிடம் எவ்வளவு பேச வேண்டும் எல்லாம் அவர்கள் சொல்வதை தான் இவர் செய்ய வேண்டும்.

Also read: விஷ்ணு விஷாலுக்கு அமைந்த படத்தை தட்டி பறித்த கார்த்தி.. வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

இந்தியாவில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவற்றை எல்லாம் சேர்த்து வைத்து இவருக்கு பாடமாக இவர்கள் எடுப்பார்கள். அதன்படி தான் கார்த்தி பொது இடங்களிலும், ரசிகர்களிடமும் செய்யப் போகிறார்.

அதனால் இனிமேல் இவர் ஒரு மாதிரியாக ரசிகர்களுக்கு காட்சியளிக்க போகிறார் கார்த்தி. பொதுவாக கார்த்தி மேடை நிகழ்ச்சிகளில் வெள்ளந்தியாக பேசக்கூடியவர். அப்படிப்பட்ட இவருக்கு இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டது எதனால் என்றும் ரசிகர்கள் நினைக்கின்றனர்.

Also read: அங்காடித்தெரு நடிகைக்கு சங்கத்தின் சார்பாக செய்த உதவி.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட கார்த்தி

Trending News