Karthi 25 th film: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் லியோ. இப்படம் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பார்ப்பதை போல தற்போது கார்த்தியின் 25 ஆவது படமும் ஃப்ரீ ரிலீஸ் செய்யப்படும் தகவலை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
பொதுவாக விஜய் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லை. அந்த அளவிற்கு வசூலில் பட்டையை கிளப்பும் என்பது தெரிந்த ஒன்று. இந்நிலையில் தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து ப்ரீ ரிலீஸ் பல கோடிக்கு பேசப்பட்டு வருகிறது.
இதுவரை இப்படத்திற்கு சுமார் 400 கோடி கேட்கப்பட்டதாகவும், இறுதியாக 500 கோடிக்கு இப்படத்தை டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார்கள். தற்போது அனல் பறக்கும் இத்தகைய பிசினஸ் கார்த்தி படங்களிலும் மேற்கொண்டு வருகிறது.
அவ்வாறு சமீப காலமாய் சர்தார், பொன்னியின் செல்வன் படங்களில் பேசப்பட்டு வந்த கார்த்தி, தற்பொழுது புது அவதாரம் எடுத்துள்ளார். அவ்வாறு நேரமில்லாமல் பிசியாக தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இவரின் படங்களை கொண்டு பல கோடி பிசினஸ் பார்த்து வருகின்றன. அவ்வாறு கார்த்தியின் 25 ஆவது படம் தான் ஜப்பான். இப்படத்தை சுமார் 150 கோடிக்கு ப்ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தன் 26வது படத்தையும், மேலும் 27ஆவது படம் இயக்குனர் பிரேம்குமார் மேற்கொள்ள போவதாக அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இந்த ஒவ்வொரு படமும் சுமார் 150 கோடிக்கு ப்ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Also Read: மாஸ் ஹீரோ அந்தஸ்து இருக்குமா..? 3 வருட இடைவெளி இருந்தால் விஜய் சந்திக்கும் பிரச்சனை