வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

படத்தில் பேசப் போகும் 2வது கெட்டப்.. திஹார் ஜெயிலிலேயே மிரட்டும் கார்த்தி

கார்த்தி சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு தற்போது விருமன், சர்தார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் பிஎஸ் மித்ரன் இயக்கும் சர்தார் திரைப்படம் கார்த்திக்கு ஒரு ஸ்பெஷல் திரைப்படமாக அமைந்துள்ளது. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் கார்த்தி இதுவரை காஷ்மோரா, சிறுத்தை போன்ற திரைப்படங்களில் இரட்டை கதாபாத்திரங்களை ஏற்று அசத்தி இருக்கிறார். அந்த வகையில் தற்போது உருவாகி வரும் இந்த சர்தார் திரைப்படத்திலும் அவர் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதில் அவர் வயதான மற்றும் இளமையான தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.

இதில் அவர் வயதான கெட்டப்பில் இருக்கும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஸ்பை க்ரைம் மற்றும் த்ரில்லர் கதை அமைப்பைக் கொண்டு எடுக்கப்படும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இயக்குனர் இந்த படத்தில் கார்த்தியின் வயதான தோற்றத்திற்கு மிகவும் மெனக்கெட்டு பல காட்சிகளை படமாக்கி வருகிறார். அதிலும் இந்த படத்தில் கார்த்தி திகார் ஜெயிலில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகவும் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் படம் கார்த்தியின் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்க போகிறது. மேலும் இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை லைலா ரீ என்ட்ரி கொடுக்கிறார். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை லைலா சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இளமை மாறாமல் ரீ என்ட்ரி கொடுத்துள்ள லைலா இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News