வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை

நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. எம் ஜி ஆர் முதல் ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கதாபாத்திரம் கார்த்திக்கு அமைந்தததால் இந்த படத்தை கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். முதல் படத்திலேயே பார்வையாளர்களை கவர்ந்த கார்த்தி அடுத்தடுத்து வெற்றிப்படங்களையே கொடுத்து வந்தார். திடீரென்று அவர் யோசிக்காமல் தேர்ந்தெடுத்த ஒரு சில கதைகளால் அவருடைய சினிமா கேரியரே காலியாக இருந்தது. கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்,

சகுனி: சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் சகுனி. சந்தானம், ரோஜா, நாசர் ஆகியோர் நடித்த இந்த படம் 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. நல்ல அரசியல் களம் நிறைந்த கதை என்றாலும் இழுவையான திரைக்கதையை கொண்டிருந்ததால் படம் தோல்வியடைந்தது.

Also Read: வெற்றி இயக்குனரை மதிக்காத கார்த்தி.. அதுக்குன்னு இப்படியா பழி தீர்ப்பது!

தேவ்: 2019 ஆம் ஆண்டு வெளியான தேவ் திரைப்படத்தை ரசாத் ரவிசங்கர் இயக்கியிருந்தார். ரகுல் ப்ரீத் சிங் , ஆர் ஜெ விக்னேஷ் இந்த படத்தில் நடித்திருந்தனர். சாலை சாகசத்தை மைய்யமாக கொண்ட இந்த படம் வந்த தடம் தெரியாமல் பிளாப் ஆனது. இந்த படத்தினால் ஏகப்பட்ட கடன் ஆகியது. சர்தார் படத்தின் போது தான் இந்த செட்டில்மென்ட் முடிந்தது.

அலெக்ஸ் பாண்டியன்: ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் என அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த படம் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் கார்த்திக்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

Also Read: கார்த்தி அடுத்தடுத்த எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் 2ம் பாகம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய சர்தார்-2

காற்று வெளியிடை: மணிரத்தினத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காற்று வெளியிடை. கார்த்தி மற்றும் அதிதி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்களுக்காக ஏ ஆர் ரகுமானுக்கு தேசிய விருது கிடைத்தாலும் படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி காணவில்லை.

ஆல் இன் ஆல் அழகுராஜா: கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால், பிரபு, சரண்யா, நாசர், எம் எஸ் பாஸ்கர் நடித்த திரைப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. ஆர்யா, ஜீவா, உதயநிதிக்கு காமெடிகளத்தில் வெற்றிப்படங்களை கொடுத்த ராஜேஷ் இந்த படத்தை இயக்கினார். காமெடியை மட்டுமே நம்பி திரைக்கதையை கோட்டை விட்டதால் இந்த படம் பிளாப் ஆனது.

Also Read: விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Trending News