வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குணசேகரன் மாதிரி மிருகமாக மாறிய கதிர்.. போலீஸ் கஸ்டடியில் ஜீவானந்தம், கைவிட்ட அப்பத்தா

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜீவானந்தம் கதை சுவாரசியமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கிறது. அந்த வகையில் ஜீவானந்தத்தின் அழகிய குடும்பத்தை காட்டின இரண்டு நாட்களிலேயே இவருடைய மனைவி உயிர் பிரிந்து விடுகிறது. இந்த ஒரு விஷயத்தால் ஜீவானந்தத்தின் மொத்த கோபமும் குணசேகரன் மேல் திரும்புகிறது.

இந்நிலையில் அப்பத்தாவும் வேறு வழி இல்லாமல் குணசேகரனின் மிரட்டலுக்கு பயந்து போய் ஜீவானந்தத்திற்கு எதிராக புகாரில் கையெழுத்து போட்டு விடுகிறார். இதனை தொடர்ந்து போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்ய போகிறார்கள். தன் மனைவி இழந்த சோகத்தில் ஜீவானந்தம் இருந்த நிலையில் மகளையும் பிரியும் படியாக போலீசார் அடாவடித்தனமாக லாக்கப்பில் அடைத்து விடுகிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

இந்த சூழ்நிலையில் ஜனனி, ஜீவானந்தத்தின் குழந்தைக்கு ஆதரவாக இருக்கிறார். அத்துடன் அந்த குழந்தையை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அரவணைப்பு செய்கிறார். அதே நேரத்தில் குணசேகரனின் ஆட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் அப்பத்தாவை பார்த்து தாறுமாறாக வாய்க்கு வந்தபடி வெறிகொண்ட மிருகமாய் பேசுகிறார்.

இதை பார்த்த நந்தினி மற்றும் ரேணுகாவும் வாயை மூடிக்கொண்டு அப்பத்தாவிடம் கையெழுத்து போட்டு விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். அத்துடன் நந்தினியின் குழந்தையை வைத்து மிரட்டி அனைவரையும் கைக்குள் அடக்குகிறார். இவரைப் பற்றி முழுமையாக தெரியாமல் கதிரும் வெறிபிடித்த மிருகமாய் மாறிவிட்டார்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

குறி தப்பியதால் ஜீவானந்தத்தின் மனைவி உயிர் பறிபோய் விட்டது என்று கதிர் பார்த்தும் கொஞ்சம் கூட மனம் வருந்தாமல், உடனே ஜீவானந்தத்தையும் காலி பண்ண வேண்டும் என்று துப்பாக்கியில் குறி வைக்க தயாராகி விட்டார். ஆனால் இதற்கு மேலேயும் இங்கே இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று கதிரை தடுத்துக் கொண்டு வளவன் கூட்டிப் போய் விடுகிறார்.

தற்போது குணசேகரன் மற்றும் கதிர் இவர்கள் இருவருமே வெறிபிடித்து வேட்டையாடும் மிருகமாய் ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகிறார்கள். இதில் ஜீவானந்தம் மனைவியை இழந்து, மகளைப் பிரிந்து போலீஸ் கஸ்டடியில் தண்டனை அனுபவிக்க போகிறார். இதற்கு அடுத்து ஜனனி மற்றும் அப்பத்தா செய்யப்போகும் விஷயங்கள் பொருத்து பல திருப்பங்கள் வர இருக்கிறது.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

Trending News