வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயன் இடத்தை தட்டி பறித்த கவின்.. இயக்குனர் உறுதி செய்த வெற்றி படத்தின் 2ம் பாகம்

kavin who took Sivakarthikeyan’s place: சாதாரண மக்களாலும் ஹீரோவாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் தான் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன். இவரைப் பார்த்துதான் கவின் மனதிற்குள் நம்மளுக்கும் சினிமாவில் விடிவுகால பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனென்றால் பல நடிகர்கள் எட்டாத தூரத்தில் இருந்த பொழுது சிவகார்த்திகேயன் மட்டும் தான் கவினுக்கு நெருங்கிய தூரத்தில் இருந்திருக்கிறார்.

அதனால் அவரிடம் அடிக்கடி பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஒரு காரணத்தினாலேயே இவருடைய செயல்கள் எல்லாம் பார்ப்பதற்கு கொஞ்சம் சிவகார்த்திகேயனை போல் இருக்கிறது என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. அதுமட்டுமில்லாமல் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்று சொல்லும் அளவிற்கு பெயரெடுத்து விட்டார்.

சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்டத்தை கையில் எடுக்கும் கவின்

அத்துடன் கவின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் வெற்றி பெற்று வருகிறார். அதனால் இயக்குனர்கள் பலரும் கவினை தேடி வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கேரியரில் மறக்க முடியாத வெற்றி படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படத்தை மறுபடியும் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் பொன்ராம் இறங்கிவிட்டார். அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப் போகிறது. ஆனால் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் செட் ஆக மாட்டார் என்று இயக்குனர் முடிவு பண்ணி விட்டார். காரணம் தற்போது சிவகார்த்திகேயன் வேற லெவல்ல உயர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த கேரக்டருக்கு வளர்ந்து வரும் ஹீரோ மட்டும் தான் செட் ஆகும் என்பதால் கவினை வைத்து எடுக்கப் போகிறார். இதற்கான வேலைகள் ஒவ்வொன்றும் இனி மும்மரமாக நடைபெற போகிறது. சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு கவின் ரொம்பவே பொருத்தமாக இருப்பார். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் முக்கியமான ஆணிவேராக இருந்தது சூரி.

அதனால் இவருடைய கேரக்டருக்கு யார் செட்டாகுவார் என்று இயக்குனர் சல்லடை போட்டு தேடிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கவினின் நண்பராக இருக்கும் சாண்டி மாஸ்டருக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுக்கலாமா என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. ஒரு பக்கம் கவின் இருந்தாலும் இன்னொரு பக்கம் சூரி கேரக்டருக்கு ஏற்ற ஒரு காமெடி நடிகர் இருந்தால் மட்டும்தான் அந்த படம் வெற்றியை கொடுக்கும்.

அதனால் இயக்குனர் இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆர்டிஸ்ட்களையும் தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கி விட்டார்.

SK மற்றும் கவினின் புது அப்டேட்

Trending News