ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அங்க இங்கனு தேடி கடைசியில கவினின் வருங்கால மனைவி புகைப்படம் வைரல்.. செம்மையான ஜோடி பொருத்தம்!

Actor Kavin: சிவகார்த்திகேயன் போல் சின்னத்திரையில் இருந்து வெளித்திரையில் சாதித்து காட்டியவர் தான் நடிகர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் முன்னணி கநாதாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு பெயர் கிடைத்தது.

அதிலும் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிவிட்டார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் போகவில்லை. ஆனால் கவினின் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது லிப்ட் படம் தான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read : திருமண நாளை லாக் செய்த டாடா கவின்.. பொண்டாட்டியாக போறவங்க இவங்கதான்

இதற்கு அடுத்தபடியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் டாடா படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனால் கவினின் மார்க்கெட் உச்சத்தை தொட்டு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் முன்னணி தயாரிப்பாளர்கள் கவின் படத்தை வெளியிட போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் சினிமாவில் அடுத்தடுத்த உயரத்தை அடைந்து வரும் கவின் இப்போது நிஜ வாழ்க்கையிலும் குடும்பஸ்தராக மாற இருக்கிறார். அதாவது தன்னுடைய நீண்ட நாள் காதலியை வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஆகையால் மோனிகாவின் புகைப்படத்தை ரசிகர்கள் தேடி வந்தனர்.

Also Read : கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய டாடா பட கவின்.. மனசாட்சி இல்லையா என வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் 

அங்க இங்கனு தேடி பார்த்த நிலையில் கடைசியாக கவின் வருங்கால மனைவி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதுவும் கவினுக்கும் மோனிகாவுக்கும் ஜோடி பொருத்தம் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கவினுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

மேலும் கவின், மோனிகா திருமணத்தில் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மௌனம் காத்து வந்த கவினும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விஷயத்தை விரைவில் கூறுவார் என எதிர்பார்க்கலாம்.

கவினின் வருங்கால மனைவி மோனிகா

kavin-fiancee-monicka
kavin-fiancee-monicka

Also Read : டாடாவால் எகிறிய மார்க்கெட்.. கவினுக்கு தூண்டில் போடும் 2 ஹீரோயின்கள்

Trending News