செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

குறி தப்பியதால் பலிகாடான கயல்விழி.. மகளுடன் கண்ணீர் கம்பளமாய் நிற்கதியாய் நிற்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: நாடகத்துக்கே சிம்ம சொப்பனமாக தற்போது அனைவரையும் கவர்ந்து வருவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தான். ஒவ்வொரு நாளும் அதிரடியான திருப்பங்களும், எதிர்பாராத கதையுடனும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வைத்து வருகிறது. எந்த அளவிற்கு ஒரு படம் திரில்லிங்க, சஸ்பென்ஸ் ஆக கொண்டு போக முடியுமோ, அதை சீரியலிலும் வைக்கலாம் என்று இயக்குனர் திருச்செல்வம் நடத்தி காட்டி விட்டார்.

அந்த வகையில் தற்போது வருகிற எபிசோடு திக் திக் என்று திகில் நாடகத்தை பார்ப்பது போல் பயங்கரமாக படபடப்பாக இருக்கிறது. ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று வேட்டை நாய் மாதிரி வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கும் குணசேகரன் மற்றும் கதிர். அண்ணனுக்காக கதிர் சம்பவத்தில் நேரடியாக இறங்கி வளவன் மூலமாக ஜீவானந்தத்தின் வீட்டை நெருங்கி விட்டார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை பார்த்து எல்லா உண்மையும் தெரிந்து விட்டு வருகிறேன் என்று ஜனனியும் அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார். மேலும் ஜீவானந்தம் அவருடைய மனைவி மற்றும் மகள் வெண்பாவிடம் அழகான தருணத்தை சந்தோஷமாக கழித்து வருகிறார். இப்படி மூன்று விஷயங்களும் ஒன்றாக நடக்கும் சமயத்தில் அசம்பாவிதம் நடக்க இருக்கிறது.

அதாவது ஏதோ ஒரு கும்பல் நம் வீட்டு பக்கம் வந்து விட்டது என்று அறிந்த ஜீவானந்தம் தற்காப்புக்காக சண்டை போடுவதற்கு முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் வளவன் மறைமுகமாக துப்பாக்கி சூடு நடத்துகிறார். இதில் குறி தவறியதால் ஜீவானந்தத்திற்கு பதிலாக இவருடைய மனைவி கயல்விழி பலிகாடாக ஆகிவிட்டார்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

ஆனால் இது தெரியாமல் கதிர் ஜீவானந்தத்திற்கு தான் உயிர் பிரிந்து விட்டது என்று நினைத்து சந்தோஷத்தில் வளவனை கொண்டாடுகிறார். இதற்கிடையில் அங்கே ஜனனி அனைத்து பிரச்சினைகளுக்கும் நடுவில் இருக்கிறார். பின்னர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜனனி அவர்களுக்கு உதவியாக இருக்கிறார். மேலும் மனைவியை ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்து விடுகிறார்.

இதை நேரில் பார்த்த ஜீவானந்தம் வெறி கொண்டு போய் மொத்த கோவத்துடன் இருக்கிறார். ஆனாலும் மனைவியின் இந்த நிலைமை எப்படி சரியாகும் என்று தெரியாமல் மகள் வெண்பாவுடன் கண்ணீர் கம்பளமாய் நிற்கதியாய் நிற்கிறார். இந்த நிலையில் தான் அப்பத்தா வாயைத் திறந்து ஜீவானந்தம் என்னுடைய ஆளு தான் என்று வீட்டில் இருக்கும் அனைவரிடம் சொல்லி குணசேகரனுக்கு ஷாக் கொடுக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்து என்ன திருப்பங்கள் வர இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

Trending News