வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ்.. எந்த கதாபாத்திரம் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதுவரை நாம் பார்த்த பரிட்சயமான திரை நட்சத்திரங்கள் அப்படியே அரசர்கள் போல காட்சி அளிக்கின்றனர்.

கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படம் ஒரு சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் நழுவவிட்டு உள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக நடந்து வந்தது.

இந்த படத்தின் வாய்ப்பு வரும்போது கீர்த்தி சுரேஷ் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தின் வாய்ப்பும் அவருக்கு வந்துள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வந்ததால் பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

அதாவது சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது மிகப்பெரிய அங்கீகாரம். இதனால் தனது மார்க்கெட் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் உயரும் என கருதி மற்ற பட வாய்ப்புகளை கீர்த்தி சுரேஷ் தவிர்த்துவிட்டார். ஆனால் அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கீர்த்தி சுரேஷுக்கும் எதிர்பார்த்த அளவு இப்படத்தில் ஸ்கோப் கிடைக்கவில்லை. இதனால் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் இழந்துள்ளார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் தற்போது திரிஷா நடித்துள்ளார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை மட்டுமல்லாமல் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷ் கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தின் வாய்ப்பையும் அண்ணாத்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தவிர்த்துவிட்டார். தற்போது மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படங்களை தவறவிட்ட வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளார்.

Trending News