Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பின்வாங்கிய கேஜிஎப் 2.. பீஸ்ட் படத்தால் மொத்த திட்டத்தையும் மாற்றும் படக்குழு

பின்வாங்கிய கேஜிஎப் 2.. பீஸ்ட் படத்தால் மொத்த திட்டத்தையும் மாற்றும் படக்குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் திரையில் காண காத்திருக்கின்றனர். விஜய்யின் மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் பெற்ற […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் திரையில் காண காத்திருக்கின்றனர். விஜய்யின் மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் பெற்ற நிலையில் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பீஸ்ட் படத்தில் அரபி குத்து பாடல் வெளியாகி மிகக்குறுகிய காலத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது. தற்போது ஜாலியோ ஜிம்கானா என தொடங்கும் இரண்டாம் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை விஜய்யே பாடியுள்ளார். இப்பாடல் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

விஜய்க்கு ஏராளமான குடும்ப ரசிகர்கள் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு பிறகு கேஜிஎஃப் 2 படத்தை சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கே ஜி எஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் கேஜிஎஃப் படத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த இரண்டு படங்களுமே ஒருநாள் வித்தியாசத்தில் வெளியாக உள்ளதால் எந்த படம் அதிக வசூல் பெறும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கண்டிப்பாக கேஜிஎஃப் படத்தால் பீஸ்ட் படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது எனக் கூறியுள்ளார்.

ஏனென்றால் விஜய்க்கு, எல்லா மாநிலத்திலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் இவருக்கு குடும்பபாங்கான ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். மேலும், பீஸ்ட் படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக கே ஜி எஃப் படத்தையும் பார்ப்பார்கள். அதனால் இரண்டு படங்களுமே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.