சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கோலி, ரோஹித் எங்ககிட்ட பச்சா பசங்க.. வேர்ல்ட் கப் எங்களுக்குத்தான் என வாய்ச்சௌடால் காட்டும் டீம்

2023 உலகக்கோப்பை விளையாட்டில் 32 போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இன்று 33வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 அணிகள் இதில் கிட்டத்தட்ட அரை இறுதிக்கு முன்னேறி விட்டது. அந்த மூன்றாவது மற்றும் நாலாவது இடத்திற்கு மட்டும் கடும் போட்டி நிலவி வருகிறது.

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா 12 புள்ளிகள் பெற்று தங்களுக்கு உண்டான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதன்பின் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று மற்றும் நாலாவது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஆன இங்கிலாந்த அணி இம்முறை செமி பைனல் வாய்ப்பை இழந்துள்ளது

இப்பொழுது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற அணிகளும் ஏதாவது ஆச்சரியம் நடந்தால் நான்காவது இடத்திற்கு முன்னேறும். இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பல சுவாரசியமான நிகழ்வுகள் இனிமேல் தான் நடக்கப் போகிறது.

முதல் நான்கு இடத்தை பிடித்திருக்கும் அணிகளிடம் பல குறைகள் இருக்கிறது. சவுத் ஆப்பிரிக்கா பொருத்தவரை ஒரு லக்கில்லாத டீம் என்று சொல்லலாம். லீக் போட்டிகள் அனைத்திலும் ஆக்ரோஷம் காட்டும் அவர்கள் செமி பைனல் மற்றும் பைனல் வந்துவிட்டால் சற்று தடுமாறி விடுவார்கள். அதைப்போலத்தான் நியூசிலாந்து அணியும்.

ஆஸ்திரேலியா நாக்கவுட் போட்டிகளில் நன்றாக விளையாடினாலும் இப்பொழுது 2 வீரர்களின் இழப்பு அவர்களுக்கு பின்னடைவாகவே இருக்கிறது. மிக்செல் மார்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்பி உள்ளார். அதேபோல கிளன் மேக்ஸ்வெல் காயம் காரணமாக வெளியில் உள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை நாக்கவுட் போட்டிகள் என்றால் பதட்டமாகி விடுவார்கள்.

அடுத்து இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் மோதவிக்கிறது.இந்தியாவை எளிதில் வீழ்த்துவோம். நட்சத்திர வீரர்கள் ஆகிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் தனித்தனியே வியூகங்கள் வைத்துள்ளோம் அதை செயல்படுத்தினால் வெற்றி எங்களுக்கு. கோப்பையுடன் தான் நாடு திரும்புவோம் என அந்த அணியின் நட்சத்திர வீரர் வாண்டர் டெசன் கூறியுள்ளார்.

Trending News