புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விராட், ரோகித் பலவீனத்தை போட்டுடைத்த இலங்கை. சவால் விட்டு காய் நகர்த்தும் ஜெயசூர்யா

இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளையும் கோட்டை விட்டுள்ளது. இந்தியா கையில்தான் அந்த இரண்டு போட்டிகளும் இருந்தது. ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டம் ஆடிய ரோகித் சர்மா போட்டியை இந்தியா பக்கம் கொண்டு வந்தார்.

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களுக்கு 80 முதல் 90 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன் பின் எடுக்க வேண்டிய 110 மற்றும் 140 ரன்களுக்கு மீதமுள்ள 10 விக்கெட்டுகளையும் இழந்து விட்டது.

முதல் போட்டியில் 14 பந்துகளுக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் அர்ஸ்திப் சிங் கடைசி விக்கெட்டை பறி கொடுத்ததன் மூலம் போட்டி ட்ரா ஆனது. அதே போல் இரண்டாவது போட்டியிலும் 140 ரன்கள் எடுப்பதற்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது

சவால் விட்டு காய் நகர்த்தும் ஜெயசூர்யா

இலங்கை அணி அவர்களது சுழற் பந்து வீச்சின் மூலம் இந்திய அணியை கட்டுக்குள் கொண்டு வந்து திணறடித்தது. ரோகித் சர்மா, அக்சர் பட்டேலை தவிர இந்த தொடரில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இலங்கை அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று மற்றொன்றை சமன் செய்தது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது பலவீனமும் எங்களுக்கு தெரியும் என இலங்கை அணி ஆர்ப்பரித்து வருகிறது. விராட் கோலிக்கு லெக் பிரேக் பந்தில் விளையாடுவது சற்று சிரமமாக உள்ளது. அதேபோல் ரோகித் சர்மா அவசரப்பட்டு தூக்கி அடித்து அவுட் ஆகிறார். இதைத்தான் அவர்கள் இருவரது பலவீனமாக கருதுகிறார்கள். ஒவ்வொன்றையும் புது பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

Trending News