ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அவர் முன்னால், கோலி – ரோகித் ஒன்னுமே இல்லை.. வம்புக்கு இழுத்த இங்கிலாந்து வீரர்

விராட் கோலி, ரோகித் சர்மா காலமெல்லாம் முடிஞ்சிருச்சு, அவர்களிடம் சரக்கும் இல்லை. இனி அவர்கள் வருங்கால சந்ததியினருக்கு வழிவிட்டு நடையை கட்டிவிடலாம் என்று இங்கிலாந்து வீரர் இவர்கள் இருவரையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் விளையாடிய அந்த வீரர் எப்பொழுதுமே இந்திய அணிக்கு எதிராகத் தான் பேசுவார். சில நேரங்களில் மாட்டிக்கொண்டு சப்பை கட்டும் கட்டுவார். எப்பொழுதுமே நான் பொதுவாக சொல்கிறேன் என்று சமாளித்து விடுவார்.

மைக்கேல் வாகன் தான் அந்த வீரர். இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார். அவர்தான் அடுத்த பத்து ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்யும் வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.

Michael-vaughan
Michael-vaughan

ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை புள்ளி பட்டியலில் பாபர் அசாம் முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆக கூடிய நேரம் அவருக்கு விரைவில் வந்துவிடும். ஏனென்றால் டெஸ்ட் போட்டிகளிலும் தனது முழு திறமையை நிரூபித்து வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 196 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டியை, ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதில் இருந்து தடுத்துவிட்டார்.

Trending News