புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

சச்சினின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்த ‘கிங்’ கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் களத்தில் நின்றால் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனம் தான். அதிரடி செயல்களுக்கு பேர் போன கோலி, சச்சினின் சாதனைகளை முறியடிக்க முடியுமா ? என கேள்வி எழுப்பியவர்களுக்கு தன் திறமைகள் மூலம் ஒவ்வொரு சாதனையாக படைத்து வருகிறார். அந்தவகையில், இன்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கபில்தேவ், கவாஸ்கர், தோனி உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பாவான்கள் இருந்த நிலையில், அவர்களை அடிதொற்றி பல்வேறு வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். அடுத்து, 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீச் அணிக்கு எதிராக டெஸ்டில் அறிமுகமானார். அப்போதைய கேப்டன்களாக இருந்த தோனி, காம்பீர் உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட்டு, அவர் தன் திறமையால் மெல்ல மெல்ல முன்னேறி கேப்டனாக பதவியேற்றார். அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி மேலும் வலுவானது.

அதிக போட்டிகளில் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்த கோலி, தொடர் சாதனை நாயகனாக வலம் வருகிறார். இதுவரை 295 போட்டிகளில் 283 விளையாடி 13906 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவரது அதிகபட்சம் ஸ்கோர் 183 அடித்து 58.18 சராசரி வைத்துள்ளார். அதேபோல் டெஸ்ட் தொடரில் 114 போட்டிகளில் 193 இன்னிங்ஸ்களில் பங்கேற்று, 8871 ரன்களும், அதிகபட்சமாக 254 ரன்கள் எடுத்து, 4874 சராசரி வைத்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும் கட்டுக்கோப்பாக தோற்றமளிக்கும் கோலி, சமீப காலத்தில் அவர் பேட்டிங் சரியில்லை என்று கூறிய விமர்சகர்களுக்கு தன் அதிரடி பேட்டிங் மூலம் பதிலளித்து வருகிறார். அதன்படி, தற்போது, வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து 2 வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில், வங்கதேச அணி 233 ரன்களுக்கு அவுட்டானது. இப்போட்டியில் இந்தியா அதிவேக 50, 100, 150 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் விராட் கோலியால் மற்றொரு சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் அடித்தது உலக சாதனையாக இருந்த நிலையில், விராட் கோலி 594 இன்னிங்ஸ்களில் 27000 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கோலி.

27,000 ரன்கள் அடித்து இப்பட்டியலில் உள்ள ஜாம்பாவான்கள், 623 இன்னிங்ஸ் சச்சின் டெண்டுல்கரும், 648 இன்னிங்சில் குமார் சங்ககாராவும், 650 இன்னிங்ஸ் ரிக்கி பாண்டிங்கும் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இந்திய வீரரின் சாதனையை மற்றொரு வீரர் முறித்து முதலிடம் பெறுவது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சச்சினின் மேலும் பல சாதனைகளை விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News