Kollywood Actors Rajini and Kamal speech in Kalaignar 100 show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் கலைஉலக சிறப்பியல்புகளை எடுத்துக் கூறும் வண்ணமும் அவரின் வாழ்வியல் சாதனைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
கலைஞர் 100 விழாவிற்கு திரை பிரபலங்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர். அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சிய ரஜினி மற்றும் கமல் தான் முன்னணி பெரிய நடிகர்கள், அவர்கள் வந்தால் போதும் கூட்டம் வந்துவிடும் என ஏற்பாடுகளை பலமாக செய்து இருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள்.
எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டமும் இல்லை. ரசிகர்களின் ஆரவாரமும் இல்லை. ரஜினி கமலை தவிர்த்து முன்னணி நடிகர்கள் என சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி, நயன்தாரா போன்றோர் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்த விழாவை பலரும் சொதப்பி விட்டு சென்றனர்.
Also read: பாதி கூட நிறையல, காத்து வாங்கிய இருக்கைகள்.. ரஜினி, கமல் வந்தும் வெறிச்சோடி போன கலைஞர் 100
முதலில் பேசிய கமல் தொகுப்பாளர் போல் ஓரமாக நின்று பேசி கலைஞரின் மேடையில் எப்போதும் நான் ஓரமாகவே நிற்பேன் என்றார். இவ்வாறு கமல் கூறியதும் கலைஞனாக கொண்டாடிய கமலை அரசியல் என்று வரும்போது தமிழ் மக்கள் ஓரம் கட்டிய கதையை நினைவு படுத்தியது.
அடுத்ததாக பேசிய ரஜினி அவர்கள் கலைஞரை கொண்டாட எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை இழுத்தார். அதை கேட்ட நெட்டிசன்கள் “நல்லவேளை நீங்கள் அரசியலுக்கு வரவில்லை நாங்கள் தப்பித்தோம்” என்று கிண்டலாக பதிவிட்டு உள்ளனர்.
சினிமாவை தவிர, இளைய தளபதி விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவிக்கும் பொருட்டு பல திட்டங்களை முன்னெடுத்து செயல் படுத்தி வருகிறார். இதனால் இளைஞர்களின் பார்வை விஜய்யின் மீது பதிந்துள்ளது.
அஜித் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் “இவர் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்!” என்று எதிர்பார்க்கிறார்கள். ஆக கூடி பழையனவற்றை புறக்கணித்து, புதுமையை வரவேற்கும் விதமாக இளைஞர்கள் அரசியலில் ரஜினி கமலை ஓரம் கட்டி, அஜித் விஜய்யை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.