Kottukkaali: சிவகார்த்திகேயன் நடிகர் என்பதையும் தாண்டி பல தரமான படைப்புகளை தயாரித்து வருகிறார். அப்படி அவருடைய தயாரிப்பில் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் தான் கொட்டுக்காளி.
கதையின் நாயகனாக புது அவதாரம் எடுத்துள்ள சூரி நடித்துள்ள இப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. அதனாலேயே இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ட்ரெய்லர் வெளிவந்த போதே என்ன ஒண்ணுமே புரியல என்ற கருத்துக்கள் தான் வெளிவந்தது.
ஆனாலும் இசை இல்லாமல் புது முயற்சியில் உருவாகி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்களும் ஆவலாக இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி இருக்கிறது கொட்டுக்காளி. படத்தை பார்த்த பலரும் தங்களுடைய அதிருப்தியை இப்போது வெளியிட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு கொட்டு வைத்த அமீர்
அந்த வகையில் இயக்குனர் அமீர் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது கொட்டுக்காளி படத்தை விமர்சித்தது வைரலாகி வருகிறது. இப்படம் பல விருதுகளை வென்றுள்ளது அந்த கண்ணியத்தை கெடுக்காமல் சிவகார்த்திகேயன் இருந்திருக்க வேண்டும்.
நான் இப்படத்தை தயாரித்து இருந்தால் நிச்சயம் தியேட்டருக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன். இப்போது படத்தை பார்த்த பலரும் கொடுத்த காசு வீணா போச்சு என இயக்குனரை மோசமாக திட்டி வருகின்றனர். வணிக நோக்கத்தோடு படத்தை ரிலீஸ் செய்த சிவகார்த்திகேயன் ஓடிடிக்கு வித்திருக்கலாம்.
அதன் மூலம் போட்ட காசை அவர் எடுத்திருக்கலாம். படத்தை பார்க்க விரும்புபவர்களும் அதில் பார்த்திருப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு அவர் இதை கொண்டு வந்தது பெரிய வன்முறை என மனதில் பட்டதை பளிச்சென கூறி இருக்கிறார். ஒரு வகையில் இது அனைத்து தரப்பு ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் தான்.
விடுதலை, கருடன் என வளர்ந்து வந்த சூரிக்கு இது பெரும் அடி என்று சொல்லலாம். சிவகார்த்திகேயன் திட்டம் போட்டு அவரை பழி வாங்கி விட்டார் என்று கூட ஆடியன்ஸ் கொந்தளித்து வருகின்றனர். படத்தின் வசூல் கூட எதிர்பார்த்த லாபத்தை பெறவில்லை. ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் போட்ட கணக்கு இதன் மூலம் தப்பாக போயிருக்கிறது.
சிவகார்த்திகேயனால் விமர்சனமான கொட்டுக்காளி
- திணறும் கொட்டுக்காளி, மொத்த வசூல் ரிப்போர்ட்
- சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி வென்றதா.?
- ஒரே நாளில் மோதிய சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ்