திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

KS Ravikumar: 5 ஹீரோயினை வைத்து பழிவாங்க தயாரான KS ரவிக்குமார்.. கமர்சியல் ஹிட்க்கு ஓகே சொன்ன கமல்

Ks Ravikumar and Kamal: தயாரிப்பாளர்களின் நிலைமையை புரிந்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்காமல் எந்தவித நஷ்டமும் ஏற்படாத அளவிற்கு படத்தை எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். அது மட்டுமில்லாமல் இவர் எடுக்கக்கூடிய படங்கள் முக்கால்வாசி கமர்சியல் படமாகவும் மக்களை அதிகமாக கவர்ந்து ஹிட் ஆகும் அளவிற்கு இருக்கும்.

அப்படிப்பட்டவருடன் கமல் இணைந்து கூட்டணி வைத்த படங்களான அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் மற்றும் தெனாலி. இந்த படங்கள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் காமெடிக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு இருக்கும். முக்கியமாக காதல், ரொமான்டிக், ஆக்சன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக கமர்சியலாக ஹிட் ஆகியிருக்கிறது.

KS ரவிக்குமார் கமல் கூட்டணியில் உருவாகப் போகும் இரண்டாம் பாகம்

அதிலும் இவர்கள் காம்போவில் வந்த பஞ்சதந்திரம் படத்தை மறக்கவே முடியாத அளவிற்கு நக்கல் நையாண்டியாக இருக்கும். இந்த மாதிரி ஒரு படத்தை மறுபடியும் திரையில் பார்த்து ரசிக்கலாம் என்று ஏங்க கூடிய அளவிற்கு ஹீட் அடித்திருக்கிறது. அந்த வகையில் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு கே எஸ் ரவிக்குமார் தயாராகிவிட்டார்.

ஏற்கனவே வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் ஐந்து ஆண்கள் சேர்ந்து கட்டின மனைவிகளை ஏமாற்றி சொகுசாக என்ஜாய் பண்ணுவதற்கு பொய் சொல்லி ஒரு ட்ரிப் ஏற்பாடு பண்ணி இருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் ஐந்து ஹீரோயின்களை வைத்து ஹீரோக்களை பழிவாங்குவது போல் கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.

இதற்காக ஒன் லைன் ஸ்டோரி கமலிடம் சொல்லிய பொழுது அவர் உடனே ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது கமல் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அத்துடன் சங்கர் இயக்கத்தில் ஏற்கனவே நடித்து முடித்த இந்தியன் 2 மற்றும் 3 வெளியிட முடியாமல் சிக்கலில் தவித்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் கூட கமல் அடுத்த படத்திற்கான அஸ்திவாரத்தையும் போட்டுவிட்டார். அதற்கு காரணம் அந்தப் படத்தில் கமல் அவருடைய இயல்பான கேரக்டரில் நடித்திருப்பார். ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு உல்லாசமாக சுற்ற வேண்டும் என்ற ஆசைப்பட்ட ராம் (கமல்) கடைசியில் (சிம்ரன்) மைதிலி மற்றும் (ரம்யா கிருஷ்ணன்) மேகியிடம் மாட்டிக் கொண்டு முழித்து வருவார்.

இப்பொழுதெல்லாம் ஏற்கனவே ஹிட்டான படத்தை எடுத்து இரண்டாம் பாகமாக கதையே உருவாக்கி வருவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் கமல் கூட்டணியில் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending News