Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒரே நாளில் பல கோடியை அள்ள போகும் குபேரா.. தனுஷ் காட்டில் பண மழை

ஒரே நாளில் பல கோடியை அள்ள போகும் குபேரா.. தனுஷ் காட்டில் பண மழை

Dhanush : தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படம் இப்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநரை நம்பி தனுஷ் நடித்த வாத்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் மீண்டும் சேகர் கம்முலா படத்தில் நடித்திருந்தார். […]

Dhanush : தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படம் இப்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநரை நம்பி தனுஷ் நடித்த வாத்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் மீண்டும் சேகர் கம்முலா படத்தில் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக குபேரா படம் அமைந்திருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று நாட்களான நிலையில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பமாக படத்தை பார்க்க தியேட்டருக்கு மக்கள் அலைமோதுகிறார்கள்.

விடுமுறை நாட்களை குறிவைக்கும் குபேரா படம்

ஆகையால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களை கணக்கிலிட்டு இந்த வார இறுதிக்குள் கிட்டத்தட்ட 80 கோடி வசூல் செய்துவிடும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. இதனால் தனுஷின் குபேரா படம் பண மழையில் நனைந்து வருகிறது.

மேலும் தனுஷின் நடிப்பில் வெளியான ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அவர் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இப்போது தனுஷ் மீண்டும் குபேரா படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இது தவிர நித்யாமேனனுடன் இணைந்து இட்லி கடை படத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் இந்த வருடம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் தனுசுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.