வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வாய்ப்பில்லாததால் இப்படி ஒரு நிலைமையா?.. உப்புக்கு சப்பாணியான லட்சுமி மேனன்

கும்கி திரைப்படத்தில் ஆரம்பித்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் லட்சுமிமேனன். நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படம் இவருக்கு பாராட்டை பெற்று தந்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் இப்படி ஒரு நடிகை இருப்பதையே ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் லட்சுமிமேனன் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளிவந்தது.

ஆனால் சாய் பல்லவி, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் அதிலிருந்து விலகியதால் தான் அவருக்கு இந்த வாய்ப்பை கிடைத்துள்ளதாக ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் இப்போது மூன்று, நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இதனால் அவர் எந்த படத்திற்கு, எந்த நேரத்தில் சூட்டிங் செல்கிறார் என்று அவருக்கே தெரியவில்லையாம். இஷ்டப்பட்ட நேரத்தில் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு செல்கிறாராம். இதனால் முன்னணி ஹீரோயின்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சாய் பல்லவி, திரிஷா ஆகியோர் இந்த படத்தில் இருந்து விலகியதற்கான காரணமும் இதுதான் என்று சொல்கின்றனர். அதனால் யோசித்த பட குழு எப்ப கூப்பிட்டாலும் வந்து நடித்து கொடுப்பது மாதிரி ஒரு நடிகை வேண்டும் என்று தேடி இருக்கின்றனர்.

அப்படி இந்த படத்தில் நடிக்க வந்தவர் தான் லட்சுமி மேனன். அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடையாது. இதனால் சும்மா இருக்கும் அவரை இந்த படத்தில் புக் செய்தால் தேவைப்படும் நேரத்திற்கு எல்லாம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று திட்டம் போட்டு அவரை புக் செய்திருக்கின்றனர்.

பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த லட்சுமிமேனனுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று மொத்த கோடம்பாக்கமும் அவரின் மேல் பரிதாபப்பட்டு வருகிறது. இருந்தாலும் லட்சுமி மேனன் இந்த படத்தின் மூலம் தன் ஒட்டுமொத்த திறமையும் காட்டி சினிமாவில் இன்னொரு ரவுண்டு வர தயாராகி இருக்கிறார்.

Trending News