Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லோகேஷால் லாரன்ஸுக்கு ஏற்பட்ட தலைவலி.. கடைசியில இப்படி ஆயிடுச்சே பங்கு

லோகேஷால் லாரன்ஸுக்கு ஏற்பட்ட தலைவலி.. கடைசியில இப்படி ஆயிடுச்சே பங்கு

Raghava Lawrence : லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது பென்ஸ் படம். இது லோகேஷின் LCU கான்செப்டில் தான் வருகிறது. இந்த படத்தின் போஸ்டரே வித்தியாசமாக இருந்த நிலையில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக […]

Raghava Lawrence : லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது பென்ஸ் படம். இது லோகேஷின் LCU கான்செப்டில் தான் வருகிறது. இந்த படத்தின் போஸ்டரே வித்தியாசமாக இருந்த நிலையில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அண்மையில் படக்குழு தரப்பிலிருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் மலையாள நடிகர் நிவின் பாலி இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

அதேபோல் பென்ஸ் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனும் நடிக்கிறாராம். இது தவிர இப்போது இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் இணைந்திருக்கிறார். ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

லோகேஷால் சிக்கலில் மாட்டிய லாரன்ஸ்

இதனால் அவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவ்வாறு பென்ஸ் படத்தில் அடுத்தடுத்த ஹீரோக்கள் கமிட்டாகி வருவதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. ‌ இது ஒருபுறம் இருக்க லாரன்ஸுக்கு மிகப்பெரிய தலைவலியாக இது மாறி இருக்கிறது.

அதாவது நிவின் பாலி, மாதவன், ஹரிஷ் கல்யாண் என பல ஹீரோக்கள் இந்த படத்தில் இணைவதால் இது ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாக்க உள்ளது. இதனால் ராகவா லாரன்ஸூக்கு எந்த அளவுக்கு இந்த படத்தில் ஸ்கோப் இருக்கும் என்பது சந்தேகம் தான்.

லோகேஷ் படங்கள் என்றாலே அது மல்டி ஸ்டார் படமாக தான் உருவாகி வருகிறது. கூலி படத்தில் கூட எக்கச்சக்க திரை பட்டாளமே நடிக்கின்றனர். இப்போது தேவையில்லாமல் தலையை கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்ற நிலையில் ராகவா லாரன்ஸ் உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.