அதிர்ஷ்டத்தின் உச்சாணி கொம்பில் லாரன்ஸ்.. ஹீரோவாக, சூப்பர் ஸ்டார் படத்தின் 2ஆம் பாகம்

பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்படும். அவ்வாறு லாரன்ஸுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த காஞ்சனா படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் எடுத்து அதிலும் வெற்றி கண்டார் லாரன்ஸ். ஆனால் அதன்பிறகு லாரன்ஸின் படங்கள் பெரிய அளவில் போகவில்லை.

இதற்காக லாரன்ஸ் பல இயக்குனர்களிடம் நல்ல கதை கேட்டுவருகிறார். இந்நிலையில் பிரபல சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்கயுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் தான் லாரன்ஸ். ரஜினியைப் போலவே இவரும் ராகவேந்திரா கடவுள் மீது மிகுந்த பக்தி உள்ளவர்.

இந்நிலையில் பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி வாசு முழு வீச்சில் இறங்கினார். ஆனால் ரஜினி எப்போதும் தான் நடித்த படங்களில் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பமாட்டார்.

மேலும் இயக்குனர் ஷங்கர் விரும்பி கேட்டதால் தான் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.o படத்தில் ரஜினி நடித்தார். இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் மற்ற பிரபலங்கள் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வெளியாகும்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சந்திரமுகி 2 படத்திற்கான கதை எல்லாம் தயார் நிலையில் வைத்துள்ளாராம் இயக்குநர் வாசு. தற்போது லாரன்ஸ் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இயக்குனர் இப்படத்திற்காக காத்திருக்கிறார்.

லாரன்ஸ் தன் படங்களை முடித்த கையோடு சந்திரமுகி 2 படத்தில் நடிக்கயுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை மிக விரைவில் எடுத்து மூன்று மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பல சாதனைகள் புரிந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →