Leaders Age When The Party Started: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவை பெற்று நீடித்து நிற்பது தான் முக்கியம். அதன்படி தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் உருவாகி இருக்கின்றனர். அதைப்பற்றியும் தலைவர்கள் கட்சி தொடங்கிய போது அவர்களுக்கான வயது பற்றியும் இங்கு காண்போம்.
அண்ணாதுரை: தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கும் திமுக கட்சியை தொடங்கிய பெருமை இவரையே சேரும். அதிலும் தன்னுடைய 40 வயதில் இந்த கட்சியை தொடங்கி தற்போது மிகப்பெரும் கட்சியாக திமுக உருவெடுத்ததற்கு காரணமாக இருக்கிறார். அந்த வகையில் திமுக கட்சி அண்ணாதுரையால் 1949 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உதயசூரியன் தான் திமுக கட்சியின் சின்னம்.
எம்ஜிஆர்: நடிகராக இருந்து சிறந்த அரசியல் தலைவராக உருவெடுத்த எம்ஜிஆர் அதிமுக கட்சியை தன்னுடைய 55வது வயதில் தொடங்கினார். இரட்டை இலை தான் கட்சியின் சின்னம். அதன்படி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிமுக கட்சி பின்னாளில் ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு தற்போது அவருடைய மறைவிற்குப் பின்னர் பொலிவிழந்துள்ளது.
Also read: தளபதியின் லயன் அப்பில் இருந்த 7 படங்கள்.. அரசியலால் சினிமாவுக்கு போடும் முழுக்கு
ராமதாஸ்: 1989 ஆம் ஆண்டு ராமதாஸ் அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவப்பட்டது. இதன் சின்னம் பழுத்த மாம்பழம் ஆகும். இக்கட்சி ஆரம்பிக்கப்படும் போது இதன் தலைவருக்கு 50 வயது ஆகும்.
தொல். திருமாவளவன்: இவர் விசிக என்று அழைக்கப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை 1991 ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது இவருக்கு வயது 29 தான்.
ஜி.கே மூப்பனார்: இவர் தன்னுடைய 65 ஆவது வயதில் கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளை வகித்த இவர் கருத்து வேறுபாட்டின் காரணமாக 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
விஜயகாந்த்: 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த் அவர்களால் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 53 வயது. இக்கட்சியின் சின்னம் முரசு.
Also read: கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து சொன்ன 5 பிரபலங்கள்.. சக அரசியல்வாதியாய் வரவேற்ற கமல்
சீமான்: கடந்த 2010 ஆம் ஆண்டு சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சி நிறுவப்பட்டது. அப்போது இவருக்கு வயது 44. பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கமல்: கடந்த 2018 ஆம் ஆண்டு கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது இவருக்கு வயது 64. இதன் சின்னம் டார்ச் லைட் ஆகும்.
இந்த வரிசையில் சரத்குமார் 53 வயதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அதே போல் டிடிவி தினகரன் 55 வயதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.
மேலும் நேற்று விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். 49 வயதில் கட்சியை தொடங்கி இருக்கும் இவர் எந்த அளவுக்கு ஒரு சிறந்த தலைவராக மாறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.