லியோ வியாபாரத்தை துவம்சம் செய்த ஜெயிலர்.. எப்போதும் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் நிரூபித்த ரஜினி

Leo – Jailer : இந்த வருடமும் டாப் நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்த வெளியாக இருக்கிறது. அதன்படி ரஜினியின் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. அதற்கான வியாபாரம் தற்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ரஜினி தான் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்க கூடியவர். ஆனால் மற்ற மொழிகளில் விஜய்யின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இதனால் லியோ படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வியாபாரம் ஆகியிருந்தது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் லியோ படத்தின் விநியோக உரிமை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.

Also Read : ஜூன் 22 டபுள் ட்ரீட்.. ஆண்டவரை லியோவில் கோர்த்துவிட்ட லோகேஷ்

அதாவது கிட்டத்தட்ட 9.5 கோடி கொடுத்து ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் இந்த படத்தை வாங்கி இருந்தது. இப்போது விஜய்யின் லியோ வியாபாரத்தை தும்சம் செய்துள்ளது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம். இதற்கு காரணம் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இதனால் கேரளாவில் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக இருக்கிறது. அதனால் லியோ படத்தை வாங்கிய ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் ஜெயிலர் படத்தை 12 கோடி கொடுத்து வாங்கி உள்ளனர். இதுவரை தமிழ் படங்களை கேரளாவில் இவ்வளவு விலைக்கு யாரும் வாங்கியதில்லை.

Also Read : வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

ஆகையால் அஜெயிலர் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி வெளிநாட்டு உரிமை, ஓடிடி ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் ஆகியவை இப்போதே கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் ஜெயிலர் படம் வியாபாரம் செய்துள்ளது. இதனால் சன் பிக்சர்ஸ் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனராம்.

அதாவது கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் பெரிய அளவு லாபம் கிடைக்கவில்லை. இதற்காகத்தான் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். அதற்கு கைமேல் பலனாக நிறைய கோடிகளை வாரிக் குவிக்கிறது ஜெயிலர் படம்.

Also Read : விக்ரம் வசூல், லியோ பிசினஸ் மொத்தமாக அள்ளிய ஜெயிலர்.. சம்பவம் செய்யும் நெல்சன்