ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸ் சீசன் 7ல் வெளிவந்த லியோ சீக்ரெட்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த லோகேஷ்

Lokesh Kanagaraj- Leo: பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களுக்கு சிறந்த என்டர்டைன்மென்ட் ஷோ என்றாலும், அதை கமல் தொகுத்து வழங்குவதாலேயே நிறைய பேர் பார்க்கின்றனர். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக லியோ படத்தின் உச்சகட்ட சீக்ரெட் லீக் ஆகி விட்டது.

விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் இந்த மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது .இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் இருக்கின்றனர். சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டானது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் கிளப்பியது.

Also Read: பவாவின் இன்னொரு முகத்தை கிழித்தெறிந்த பத்தினி நடிகை.. ஆண்டவர் தாங்கி பிடித்ததெல்லாம் வேஸ்ட்டா போச்சு

இந்த சூழலில் லியோ படத்தில் லோகேஷ் மறைத்து வைத்திருந்த சீக்ரெட் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அம்பலம் ஆகிறது. எப்போதுமே லோகேஷின் படத்தில் ஒரு சில கேரக்டரை அவர் மறைத்து வைத்து விடுவார். அதை தியேட்டர்களில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காட்டுவார். அதேபோன்று இப்போது லியோ படத்திலும் ஒரு சில கேரக்டர்களை ஒழித்து வைத்திருக்கிறார்.

இவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்களா என்பதே யாருக்கும் தெரியாது. ஆனால் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்த லோகேஷ், மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டாரு. லோகேஷ் கனகராஜ் உலக நாயகனுக்கு விக்ரம் படத்தின் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தார். கமல் எப்போதுமே ஒரு கெட்டப்பை போட்டால் படம் முடிந்ததும் மாற்றி விடுவார்.

Also Read: நாமினேஷனில் இருக்கும் 7 பேரில் வெளியிறப் போகும் அடுத்த நபர்.. முதல் நாளே மொத்த ஓட்டுகளையும் அள்ளிய சைக்கோ

ஆனால் கமல் விக்ரம் படத்தில் எந்த கெட்டப்பில் இருந்தாரோ அதே கெட்டப்பில் தான் இப்போதும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் விக்ரம் படத்தில் நடித்த வசந்தி, ஏஜென்ட் டீனா எல்லாரும் நடிக்கிறார்கள்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது லோகேஷின் LCU-ல் உருவாகி இருக்கும் லியோ படத்தில் உலக நாயகனும் நடிப்பது உறுதியானது. இதில் கமல் விக்ரம் படத்தில் வந்திருந்த கேரக்டரில் இரண்டு மூன்று காட்சிகளில் வருகிறார் என்பது இந்த கெட்டப் மாற்றாத விஷயத்திலிருந்து இருந்து தெரிகிறது .

Also Read: சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. தடையை மீறி வாய்ப்பு தர காரணம்

Trending News