செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமல், விக்ரமை ஓரம் கட்டிய புதிய ஹீரோ.. முதல் படத்திலேயே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தம்பி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்க்கவில்லை என்பது நிதர்சனம் தான் என்றாலும் சில நடிகர்கள் தங்களது நடிப்பு திறமையால் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளனர். அந்த வகையில் உலக நாயகன் கமல் மற்றும் விக்ரம் போன்ற நடிகர்கள் சில படங்களுக்குப் பிறகு தங்களது நடிப்பு திறமையை காட்டியுள்ளனர்.

ஆனால் இப்போது வந்திருக்கும் புதிய ஹீரோ ஒருவர் கமல் மற்றும் விக்ரம் இருவரையுமே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அசாத்தியமான நடிப்பை காட்டி உள்ளார். அந்த இளம் நடிகரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து உள்ளார்களாம். அந்த அளவுக்கு தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் முதல் படத்திலேயே இறக்கி உள்ளார்.

Also Read : குருவிடம் சம்பளத்திற்காக மல்லுக்கட்டிய கமல்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்

அதாவது கமல் குணா படத்திலும், விக்ரம் தெய்வத்திருமகள் படத்திலும் மனவளர்ச்சி குன்றியவர்களாக நடித்திருந்தார்கள். அதேபோல் தற்போது வெளியாகி இருக்கும் பிகினிங் படத்திலும் வினோத் கிஷன் என்ற ஹீரோ மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வினோத் கிஷன் அந்த கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி உள்ளார். இவர் உண்மையாகவே மனவளர்ச்சி குன்றியவர் தானா என ரசிகர்களை யோசிக்கும் வைக்கும் அளவிற்கு அவரது நடிப்பு இருந்தது. இவர் சூர்யாவின் நந்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Also Read : அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே

அதன் பின்பு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த வினோத் கிஷன் கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் இதுவரை தனக்கான சரியான படத்திற்காக காத்திருந்த ஹீரோவுக்கு பிக்னிங் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

மேலும் வினோத் கிஷன் இந்த வயதிலேயே நடிப்பை கரைத்துக் குடித்துள்ளார். பிகினிங் படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களது அடுத்த படத்திற்கு இவரது கால்ஷீட்டை கேட்டு வருகிறார்கள். ஆகையால்
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போல் இவரும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : விஜய் இயக்குனருக்கு ஒரு ஹிட்டு கொடுத்தாச்சு.. மணிரத்தினத்தை டீலில் விட்ட கமல் , அஜித் இயக்குனருடன் கூட்டணி

Trending News