வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் போல் கடனில் தவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்த பரிதாபம்

Vijay Tv Sivakarthikeyan: சின்னத்திரையில் இருந்து வெளித்திரையில் சாதித்து காட்ட முடியும் என நிரூபித்தவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன் இப்போது உச்சாணிக்கொம்பில் இருக்கிறார். அவரது படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது.

ஆனாலும் சிவகார்த்திகேயன் இப்போது கடனில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் மாவீரன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு தான் இந்த நிலைமை என்றால் விஜய் டிவியின் மூலம் வெள்ளி திரைக்கு சென்ற மற்ற இரு பிரபலங்களும் இதே பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.

Also Read : சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை

அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்கள் ராஜலட்சுமி மற்றும் செந்தில். கிராமிய பாடல்கள் பக்காவாக பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். இதன் மூலம் வெள்ளிதிரையிலும் பல படங்களில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் அவர்களது தோற்றம் மற்றும் உடை பார்ப்பதற்கே மொத்தமாக மாறி உள்ளனர்.

அதுமட்டுமின்றி செந்தில், ராஜலட்சுமி இருவருமே பாடகர்கள் என்பதை தாண்டி சினிமாவில் நடிகர், நடிகைகளாக அவதாரம் எடுத்துள்ளனர். இது அவர்களுக்கு எந்த அளவு ஒர்க் அவுட் ஆகும் என்பது சந்தேகம்தான். செந்தில் நடித்த ஒரு படம் படுமோசமான தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் ராஜலட்சுமி பேட்டி கொடுத்திருந்தார்.

Also Read : சூப்பர் ஸ்டாரால் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இயக்குனர்.. சிவகார்த்திகேயன் நண்பனுக்கு இப்படி ஒரு நிலைமையா.?

அதாவது பேட்டியாளர் உங்களது வளர்ச்சியை பார்த்து பலர் பொறாமைப்படும் அளவிற்கு இருப்பதாக பேசி இருந்தார். அதற்கு பதில் அளித்த ராஜலட்சுமி நாங்கள் இப்போது கடனில் அவதிப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார். வெளி உலகத்திற்கு பங்களா, கார் என வசதியாக இருப்பதாக தோன்றும். ஆனால் அது எல்லாமே இஎம்ஐயில் வாங்கியது தான் என்று ராஜலட்சுமி கூறியிருந்தார்.

அதுவும் கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் சுத்தமாக வருமானமும் இல்லாமல் போய்விட்டது. அந்தச் சமயத்தில் நிறைய கடன் வாங்கியதாகவும், மேலும் சில சமயங்களில் இதுபற்றி தனது கணவரிடம் பேசும் போது, கடனை அடைக்க முடியவில்லை என்றால் சொந்த ஊருக்கே கிளம்பி விட வேண்டியது தான் என்று சொன்னாராம். அந்தளவுக்கு இவர்களது நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறதாம்.

Also Read : ஊரு ஃபுல்லா கடன வச்சுக்கிட்டு எப்படி கலர் கலரா ரீல் விடுறீங்க! பேராசையில் இருக்கும் சிவகார்த்திகேயன்

Trending News