ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிஆர்பி-யில் முதல் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. விஜய் டிவியை துரத்தியடித்த சன் டிவி

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் இந்த வார டாப் 5  டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.

இதில் கடந்த வாரம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், தொடர்ந்து டிஆர்பியை முன்னிலை வகிக்கும் சன் டிவி சீரியல்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் இருந்தது. ஆனால் பாக்கியலட்சுமிக்கு கடந்த வாரம் கிடைத்த வரவேற்பு இந்த வாரம் கிடைக்காததால் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் சன் டிவி சீரியல்கள் முதல் 5 இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஆகையால் இந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் கயல் சீரியல் பெற்றுள்ளது. இந்த சீரியலில் சுற்றியிருக்கும் பல பிரச்சினைகளை கயல் அசால்டாக சமாளிக்கிறார். இதற்கிடையில் தங்கச்சி கல்யாணத்தையும் நல்லபடியாக நடத்தி முடிக்கும் இக்கட்டான சூழ்நிலையில் கயல் இருக்கிறார்.

2-வது இடம் சன் டிவியின் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக பொன்னி மொத்த குடும்பத்தையும் டார்ச்சர் செய்கிறார். இதில் சந்தோசமாக இருக்கும் குடும்பத்தில் விஷக் கிருமியாக ஒருவன் உள்ளே நுழைந்திருக்கிறார். அதுவும் பத்தாமல் மேனகாவின் வஞ்சகமும் சூழ்ச்சியும் கௌதம் குடும்பத்திற்கு தொல்லையாக இருக்கிறது.

3-வது இடம் ரோஜா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு பக்கம் கர்ப்பமாக இருக்கும் ரோஜா தன்னுடைய குழந்தைக்கு அப்பாவான அர்ஜுனை தேடுவதும், மறுபக்கம் ரோஜாவை தேடும் அர்ஜுன். இதில் இருவரும் சேர்ந்தார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

4-வது இடத்தை சுந்தரி சீரியல் பிடித்திருக்கிறது. ஆடுபுலி ஆட்டத்தில் புலியவே நடுநடுங்க வைக்கிறது ஆடு. அப்படி தான் சுந்தரி சீரியலில் ருத்ர தாண்டவம் ஆட கிளம்பியிருக்கிறார் சுந்தரி. தன்னை பழிவாங்குவதற்காக காத்திருக்கும் கார்த்திக்குக்கு பெரிய பிளானை சுந்தரி போட்டு வைத்திருக்கிறார்.

5-வது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் மீராவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சித்தியான வாசுகி, கதாநாயகி ப்ரீத்தி இருவரும் பதட்டத்துடன் மீட்பதற்காக போராடுவது என இந்த வாரம் முழுவதும் சீரியல் சுவாரசியமாக சென்றது.

ஒருவழியாக 6-வது இடம் தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி கிடைத்துள்ளது. இதில் ராதிகாவை 2வது திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கு கோபி சென்றதை அறிந்த குடும்பம் கோபியை அடித்ததோடு மட்டுமே விட்டுவிட்டது பார்க்கும் ரசிகர்களுக்கு போதவில்லை.

அதோடு சேர்ந்து கோபியை வீட்டைவிட்டு துரத்தி இருக்க வேண்டும். அவரை அசிங்கப்படுத்தி இருக்கவேண்டும் என அதெல்லாம் நடக்காததால் முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

Trending News