Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஆடம்பரம் இல்லாமல் மக்களோடு மக்களாக விஜய் ஆண்டனி! அப்பா குட்டிக்காக வித்தியாசமான புரமோஷன்!

ஆடம்பரம் இல்லாமல் மக்களோடு மக்களாக விஜய் ஆண்டனி! அப்பா குட்டிக்காக வித்தியாசமான புரமோஷன்!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து,தயாரித்து,இசையமைத்துள்ள ‘அப்பா குட்டி’படம் நேற்று தியேட்டர்களில் ரீலிசானது.இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.


படத்தின் ரீலிசைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ள வித்தியாசமான புரமோஷன் முயற்சி தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
அதன்படி,இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் (12675) ரயிலில் விஜய் ஆண்டனி பயணம் செய்துள்ளார்.


குறிப்பாக, ரயிலின் முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் சாதாரணப் பயணிகளுடன் இணைந்து அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல்,சக பயணிகளுடன் சகஜமாக அமர்ந்து பேசியபடியே தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
திடீரென தங்களுடன் விஜய் ஆண்டனி பயணம் செய்வதைப் பார்த்த சக பயணிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும்,அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டும் மகிழ்ச்சியாக பேசியும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.பொதுவாக பெரிய பட்ஜெட்டில் ப்ரோமோசன்கள் செய்யப்படும் நிலையில்,அதற்கு மாற்றாக மக்களோடு மக்களாகப் பயணம் செய்து தனது படத்தை ப்ரோமோட் செய்தவிஜய் ஆண்டனியின் இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவரது இந்த அணுகுமுறைக்கு சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா வட்டாரத்திரனர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.