திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட இந்தப் படத்தின் கதை தான் விக்ரம் படமா?.. அட்லீயின் லிஸ்டில் சேர்ந்த லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj- Better Call Saul: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இன்று வரை பார்க்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் படத்தின் வசூல் ஒட்டு மொத்த இந்திய சினிமா உலகத்தையும் தமிழ் சினிமா பக்கம் திருப்பியது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆக வேண்டிய சமயத்தில் விக்ரம் படத்தைப் பற்றி சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது.

தமிழில் ஒரு படம் அல்லது பாட்டு ரிலீஸ் ஆனவுடன் அது மற்ற மொழியில் ரிலீஸ் ஆன படத்தின் கதையா, இசையா என அலசி ஆராய்வதற்கு சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கும். இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் லோகேஷ், விக்ரம் படத்தின் கதையை பிரபல ஹாலிவுட் சீரிஸிலிருந்து திருடி இருக்கிறார் என்ற ஒரு செய்தி வந்திருக்கிறது.

Also Read:பிளான் போட்டு வொர்க் அவுட் செய்த லோகேஷ்.. லியோ படத்தில் இருக்கும் சீக்ரெட்

‘பெட்டர் கால் சால்’ என்னும் ஒரு ஹாலிவுட் சீரியல் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பேமஸ் ஆக ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. இரண்டு பேரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதையில், காவல்துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவருடைய மகனும் போலீசாக தான் இருக்கிறார். இந்நிலையில் ஒரு சில போலீசாரால் அவருடைய மகன் கொலை செய்யப்படுகிறார். மகன் இறந்த பிறகு இவர் குடிக்கு அடிமையாகி விடுகிறார். இதனால் அவருடைய மருமகளே அவரை வெறுத்தும் ஒதுக்குகிறார்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் கதையில், ஒரு சமயத்தில் இவரையும் கொலை செய்ய வரும்பொழுது, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அப்பொழுதுதான் அவர் குடிக்க அடிமையானது போல் நடித்துக் கொண்டிருந்தார் எனவும், தன் மகனை கொலை செய்தவர்களை பழிவாங்கவே இப்படி செய்து கொண்டிருக்கிறார் எனவும் தெரியவரும். இதை காப்பியடித்து தான் விக்ரம் படத்தின் கமலஹாசன் கேரக்டர் அமைக்கப்பட்டது என தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Also Read:மாநகரம் முதல் லியோ வரை.. ஒவ்வொரு படத்திற்கும் லோகேஷ் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் நாட்கள் இதுதான்

படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் கழிந்த நிலையில் இப்படி ஒரு விஷயம் வெளியில் வந்திருப்பது, லோகேஷ் கனகராஜ் மீது ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை வைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. படம் காப்பி அடிக்கப்பட்டு இருந்தாலும் அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் காட்சிப்படுத்துவது தான் ஒரு இயக்குனரின் திறமை என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ஒரு கதாபாத்திரத்தை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டு அவர் வேறொரு கதை களத்தில் படம் எடுத்திருக்கிறார் என்று சிலர் லோகேஷுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

இந்த சர்ச்சை இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் தரப்பில் இருந்து இதற்கு பதில் எதுவும் சொல்லப்படவில்லை. இயக்குனர்கள் தங்கள் பார்க்கும் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டர் பிடித்து போய் அதை தங்களுடைய படங்களில் வைப்பது என்பது இயல்பாக நடக்கும் ஒன்று. ஆனால் பட ரிலீசின் போது இந்த படத்தின் இன்ஸ்பிரேசனில் இருந்து எடுக்கப்பட்ட கதை இது என முன்கூட்டியே சொல்லுவது இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும்.

Also Read:தயாரிப்பாளர்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் 3 படங்கள்.. தளபதி இயக்குனருக்கு வந்த சோதனை

Trending News