செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒன்னு இருக்கு ஆனா இல்ல.. லியோ படத்தில் பயங்கரமான புதிர்களை போடும் லோகேஷ் கனகராஜ்

தற்போது சினிமா வட்டாரத்திலும் சரி ரசிகர்களிடமும் சரி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது லியோ படத்தை பற்றி தான். அத்துடன் இப்படத்தை பொறுத்தவரை வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக இருக்கிறது. மேலும் இப்படம் எப்பொழுது வெளிவரும் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடும் என்று அறிவிப்பு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் தற்போது எங்கே போனாலும் அவருக்கு ராஜ மரியாதை தான் கொடுத்து வருகிறார்கள். மேலும் இவர் எந்த பங்க்ஷனுக்கு சென்றாலும் எப்பொழுதும் இவரிடம் கேட்கப்படும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். லியோ படத்தில் LCU இருக்கிறதா இல்லையா என்று தான். ஆனால் அதுக்கு இவர் இதுவரை எந்தவித தெளிவான பதிலும் சொல்லவில்லை.

Also read: சிங்கத்தோடு போட்டி போடும் சிறுத்தை.. வீம்போடு எதிர்க்கத் துணியும் கார்த்தி

அதாவது லியோ படத்தில்  LCU இருக்கு என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லாமல் அப்படியே பூசி மலுப்பி விடுகிறார். ஆனால் இதுவரை இவர் எடுத்த படங்களில் எப்படியாவது ஒரு சில காட்சிகளை வைத்து தான் எடுத்து வந்திருக்கிறார். அப்படி பார்க்கும் பொழுது இந்த படத்திலும் கண்டிப்பாக இருக்கும் என்று நம்பி இருந்த நேரத்தில் அதற்கான எந்த வித தகவலும் இப்பொழுது வரை வெளிவராமல் இருக்கிறது.

இதனால் தற்போது வரை புரியாத குழப்பமாக இருக்கிறது. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரத்தின் படி லியோ படத்தில் ஏஜென்ட் விக்ரம் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது கமலஹாசன் இப்படத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் விஜய்க்கு நண்பராக ஏஜென்ட் விக்ரம் இருக்கப் போகிறார்.

Also read: தலைவராலேயே முடியாதுன்னு சொன்ன படம்.. கொளுத்தி போடும் லியோ கதை

அட்லீஸ்ட் டெலிபோனில் பேசும் உரையாடல் கூட வைப்பார். மேலும் ரோலக்ஸ் கேரக்டரையும் லியோ படத்தில் இணைக்கிறார் என்பது உறுதி. எப்படி விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி படத்தை கொண்டு வந்தாரோ அதே மாதிரி லியோ படத்திலும் எல்லாரையும் இணைக்கும் விதமாக ஒரு காட்சி தரமான சம்பவத்தை கொடுப்பதற்கு ரெடியாகி கொண்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் லியோ படம் கண்டிப்பாக விட்ட குறை தொட்ட குறையை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கப் போகிறது. ஆனால் யார் யாரை எப்படி பயன்படுத்த போகிறார் என்று தான் இன்னும் புரியாத புதிராக குளறுபடியாக இருக்கிறது. லியோ படத்தை பொருத்தவரை விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் மிகப்பெரிய தரமான படமாக இருக்கப் போகிறது.

Also read: வியாபாரத்திற்காக புதிய யுத்தியை கையில் எடுத்த லியோ படக்குழு.. பழைய சம்பவத்தை மறந்த லோகேஷ்

Trending News