கைதி, மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டி இருக்கும் விக்ரம் திரைப்படம் தற்போது பல கோடி வசூலை வாரி குவித்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இப்படி ஒரு மாஸான திரைப்படத்தை கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். விரைவில் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்க வேண்டும் என்று அவருக்கு கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் சுவாரசியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதாவது சூப்பர் ஸ்டார் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் எந்த திரைப்படத்தை மீண்டும் இயக்க உங்களுக்கு ஆசை என்று கேட்கப்பட்டது.
அதற்கு லோகேஷ் கனகராஜ் சிறிதும் யோசிக்காமல் தளபதி திரைப்படத்தை மீண்டும் இயக்குவதற்கு ஆசை என்று கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தளபதி.
மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தில் ரஜினி சூர்யா என்ற கேரக்டரில் நடித்திருப்பார், நட்புக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு இருக்கும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை குறிப்பிட்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தளபதி திரைப்படத்தில் சூர்யா கேரக்டர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த படத்தை மீண்டும் இயக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் நான் நிச்சயம் செய்வேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜின் இந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.