சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

லியோ தோல்விக்கு இதுதான் காரணம் என செஞ்ச தப்பை ஒத்துக்கிட்ட லோகி.. தலைவர் 171க்கு போடும் ஸ்கெட்ச்

Lokesh Leo and Thalaivar 171: தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் பிரம்மாண்டமாக படங்களை எடுக்கப்பட்டு வசூலை வாரி குவித்திருக்கிறார்கள்.இருந்தாலும் சமீபத்தில் சினிமாவிற்குள் என்டரி கொடுத்த லோகேஷ் இயக்கிய படங்கள் புதுசாகவும், LCU கதை என வித்தியாசமாக கொண்டு வந்தார். அதனாலயே அனைத்து முன்னணி நடிகர்களின் வான்டெட் இயக்குனர்கள் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்து விட்டார் லோகேஷ்.

அப்படிப்பட்ட இவருடன் இரண்டாவது முறையாக விஜய் கூட்டணி வைத்த படம் தான் லியோ. இப்படத்தின் அறிவிப்பை கொடுத்ததில் இருந்து ரசிகர்கள் ரொம்பவே குஷி ஆகி அதிக அளவில் எதிர்பார்ப்பை வைத்து விட்டார்கள். அந்த வகையில் லோகேஷ் படத்தை எடுக்க ஆரம்பிக்கும் பொழுது ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ஆனால் அதுவே இவருக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி விட்டது. ரிலீஸ் தேதிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாதி வேலைகளை அவசர அவசரமாக செய்யும் படி ஆகிவிட்டது. ஆனால் படம் வெளிவந்த பிறகு இடைவேளைக்குப் பிறகு உள்ள கதை சொதப்பி விட்டதாக ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து போய்விட்டார்கள்.

Also read: லோகேஷ் பெயரை கெடுக்க இப்படி ஒரு மட்டமான வேலையா.? அத தூக்கி குப்பைல போடுங்க

ஆனால் அப்பொழுது கூட இடைவேளைக்குப் பிறகு உள்ள சீன் எல்லாம் கற்பனையை, அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. இது சம்பந்தமாக இரண்டாம் பாகம் கதை வரும் பொழுது முழுமை அடையும் என்று தவறான வதந்திகளை லோகேஷ் பல பேட்டிகளில் சொல்லி வந்தார். இப்படி எல்லாம் பூசி முழுவி வந்த லோகேஷ் தற்போது முதல் முறையாக லியோ தோல்விக்கு இதுதான் காரணம் என இவர் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு இருக்கிறார்.

அதாவது லியோ படம் பண்ணும் பொழுது அதற்கான டைம் போதவில்லை, அதனாலேயே செகண்ட் ஆஃப் கதை கொஞ்சம் சொதப்பிவிட்டது என்று உண்மையை போட்டு உடைத்து விட்டார். ஆனால் இதில் செய்த தவறை இனி அடுத்த படங்களில் செய்யவே மாட்டேன். சரியான நேரத்தை எடுத்து ஃப்ரீ ப்ரோடுக்ஷன், போஸ்ட் ப்ரோடுக்ஷன் எல்லாத்துலயும் முழு கவனமும் செலுத்திய பிறகு தான் ரிலீஸ் செய்தியை அறிவிப்பேன் என்று கூறிவிட்டார்.

அந்த வகையில் ரஜினியை வைத்து லோகேஷ் எடுக்கப் போகும் தலைவர் 171 படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வெற்றியைப் போலவே தெறிக்க விடப் போகிறார் லோகேஷ். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் விஜய்யை வைத்து ஒரு ட்ரையல் பார்த்துட்டு அதன் பின் ரஜினிக்கு மாபெரும் ஹிட் கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் நெல்சன் மற்றும் லோகேஷ் அதிபுத்திசாலியாக இருக்கிறார்கள். ஏன் என்றால் நெல்சனும் விஜய்க்கு பீஸ்ட் படத்தை சொதப்பிய பிறகுதான் ஜெயிலர் படத்தை வெற்றியாக கொடுத்தார்.

Also read: ரொமான்ஸ் வராத லோகேஷ் தயாரிப்பில் வெளியான வீடியோ.. லிப் லாக் உடன் ஃபைட் கிளப் பாடல்

Trending News