சினிமா செய்திகள்

த்ரிஷாவை வைத்து கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் போட்ட பதிவால் ஆடி போன கோலிவுட்

By · 19 நவ் 2023 · Updated 11 மே 2025
trisha-lokesh-mansoor

Lokesh-Trisha: சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஐஸ்வர்யா ராயை கேவலமாக பேசியது கடும் கண்டனத்திற்கு ஆளானது. தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. திரிஷாவை பற்றி கேவலமாகவும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் பேசிய மன்சூர் அலிகானுக்கு எதிராக தற்போது பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் லியோ படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் படத்தில் திரிஷாவுடன் பெட்ரூம் சீன் இல்லை என இன்னும் சில கொச்சையான வார்த்தைகளையும் சேர்த்து பேசி இருந்தார். இதற்கு த்ரிஷா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

trisha-tweet
trisha-tweet

இப்படி ஒரு நடிகருடன் என் வாழ்நாளில் சேர்ந்து நடிக்கவே மாட்டேன். நல்ல வேளை நான் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் மனித குலத்திற்கு அவமானம் என்று விளாசி தள்ளி இருக்கிறார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் அதிரடியாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது மன்சூர் அலிகான் பேசியதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கோபமாகவும் இருக்கிறது. நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. சக கலைஞர்களையும் பெண்களையும் நாம் மதிக்க வேண்டும். இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து த்ரிஷாவுக்கு ஆதரவாக சின்மயி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் லோகேஷ் இப்படி ஒருவரை எதற்காக லியோவில் நடிக்க தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்துக்களும் கிளம்பி கொண்டிருக்கிறது.

lokesh-tweet
lokesh-tweet

ஏற்கனவே மன்சூர் அலிகான் லியோ சக்சஸ் மீட் விழாவில் மடோனா பற்றி இப்படித்தான் உளறி வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது திரிஷாவையும் கேவலமாக விமர்சித்துள்ளார். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்டதையும் பேசி வைக்கும் இவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்ன பெண்கள் அனைவரும் அவருக்கு எதிராக ஒன்று திரண்டு உள்ளனர்.