செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த ரகசியம்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான டைட்டில் ப்ரோமோஷன் வீடியோ வெளியீட்டு இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகளில் லோகேஷ் பம்பரமாக சுழன்று வருகிறார்.

ஆனால் காஷ்மீரில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக படபிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாமல், படத்திற்கான முக்கிய காட்சிகள் மட்டும் இப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையிலும் லியோ படம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு போட்டோக்கள் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது தவிர இந்த படத்திற்கான ரகசியம் எங்குமே வெளிப்படவில்லை.

Also read: டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் படத்தின் பாணியை கையாளுகிறார். எப்படி என்றால் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் படத்தில், வேறு படத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோவை உள்ளே கொண்டு வந்து சர்ப்ரைஸ் காட்டுவார்கள். அதேபோல இவரும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முன்னணி கதாபாத்திரங்களை இணைத்து படத்தை தனது பாணியில் உருவாக்கி யாரும் யோசிக்க முடியாத மாதிரி கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார்.

அந்த வகையில் ரசிகர்கள் லியோ படம் LCU படமாகத்தான் கொண்டு வருவார் என்று நினைத்தார்கள். ஏனென்றால் விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் கைதி படத்தை இணைத்திருப்பார். அதேபோல லியோ படத்திலும் ஒரு சஸ்பென்ஸ் காட்சி கொண்டு வருவார். அந்த வகையில் இது ஒரு LCU படமாக அமையும் என்று எதிர்பார்த்தனர்.

Also read: உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

ஆனால் லோகேஷ் அந்த மாதிரி எந்தவித காட்சிகளும் இந்த படத்தில் வராது என்று திட்டவட்டமாக ஏற்கனவே கூறியிருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், கமல் போன்ற முக்கிய பிரபலங்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் இவர்களெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்று சொன்னதெல்லாம் கட்டுக்கதை தான்.

இந்த படத்தில் இவர்கள் எல்லாம் நடிக்கப் போவதில்லை அதற்கு பதிலாக இவர்கள் பெயரை மட்டும் ஆங்காங்கே வருகிற மாதிரி கதைகள் இருக்கும் என்கிறார்கள். உதாரணமாக டில்லி ரோலக்ஸ், ஏஜென்ட் அமர், விஜய் சேதுபதி சந்தானம் போன்ற பெயர்கள் மட்டுமே இந்த படத்தில் வந்து போகும்.

Also read: வசூல்ராஜாவை வச்சு செய்த ரிலீஸ்.. என்னடா இது தளபதி விஜய்க்கு வந்த சோதனை

Trending News