வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய லோகேஷ்.. வணங்கான் டிராப்பிற்கு முக்கிய காரணம் இவர் தானாம்

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏற்கனவே நந்தா, பிதாமகன் என பாலாவின் இயக்கத்தில் நடித்த சூர்யா மூன்றாவதாக இப்படத்தில் இணைந்தார். ஆனால் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த படம் பாதியிலேயே நின்று போனது திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் இந்த பிரச்சனையின் ஆரம்ப புள்ளி எது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வணங்கான் திரைப்படத்தின் சூட்டிங் ராமேஸ்வரத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. பாலா மீது இருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாக சூர்யா படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறார்.

Also read: புகழின் உச்சிக்கு ஏற்றி விட்ட இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிய சூர்யா.. ட்ராப் ஆன 3 படங்கள்

ஆனால் பாலா சூர்யாவை காலில் செருப்பு கூட இல்லாமல் ஓட வைத்து சூட்டிங் நடத்தி இருக்கிறார். இதனால் அவர் மீது சூர்யா கடும் வெறுப்பில் இருந்திருக்கிறார். அப்போது விக்ரம் திரைப்படத்தை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் சூர்யாவை சந்திக்க சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அங்கு அவர் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பற்றி கூறினாராம்.

கெஸ்ட் ரோல் என்றதும் சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா பின்பு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை கேட்டு இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார். அதன் பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் சூர்யா உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அவர் வணங்கான் திரைப்படத்திற்கு பிரேக் எடுத்துவிட்டு விக்ரம் படத்தில் நடிக்க சென்று விட்டாராம்.

Also read: பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த காமெடி நடிகர்.. அமீர், பாலாவால் கிடைத்த வாழ்க்கையை பறிகொடுத்த சோகம்

இதுதான் பாலாவுக்கு கடுப்பை வரவழைத்து இருக்கிறது. ஏற்கனவே அவர் தன் படத்தில் நடிக்கும் நடிகர்களை சூட்டிங் முடியும் வரை அடுத்த படத்தில் நடிக்க விடமாட்டார். அந்த அளவுக்கு ஒவ்வொருவரையும் டார்ச்சர் செய்து நடிக்க வைப்பார். அப்படி இருக்கும்போது சூர்யா கமலுக்காக விக்ரம் படத்தில் நடிக்க சென்றது அவரை கோபப்படுத்தி இருக்கிறது.

அதை அவர் சூட்டிங் ஸ்பாட்டில் வெவ்வேறு விதமாய் காட்டி இருக்கிறார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் சூர்யாவை கடும் வெறுப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. இது சிவகுமாரின் காதுக்கும் சென்றிருக்கிறது. அதன் பிறகு தான் அவர்கள் இணைந்து முடிவெடுத்து இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆக மொத்தம் தெரிந்தோ தெரியாமலோ லோகேஷ் இதற்கு ஒரு காரணமாக மாறிவிட்டார்.

Also read: சுய லாபத்திற்காக விஜய் கூட்டிய கூட்டம்.. தனி பாதையை உருவாக்கும் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க

Trending News