திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்னத்தை மிஞ்சும் அளவிற்கு கதையை செதுக்கி உள்ள லோகேஷ்.. தளபதி 67-ல் விஜய் செய்யப் போகும் சம்பவம்

விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் வசூல் வேட்டையாடிய நிலையில் மீண்டும் இவர்கள் இணைவதால் எதைப் பற்றிய கதை இப்படத்தில் அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read : நடிப்பிலும் ஒரு கை பார்க்கப்போகும் லோகேஷ் கனகராஜ்.. வெளிவந்த சிம்பு பட அப்டேட்

ஆரம்பத்தில் இருந்தே பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ் சினிமாவுக்கு வர முக்கியமாக காரணமாக இருந்தது கமலின் நாயகன் படம் தான் என்று கூறியிருந்தார். அதேபோல் நாயகன், தலைவா போன்ற படங்களின் இன்ஸ்பிரேஷன் காரணமாக கேங்ஸ்டர் படமாக தளபதி 67 படம் உருவாக உள்ளது. மணிரத்தினத்தை மிஞ்சும் அளவிற்கு இப்படத்தின் கதையை லோகேஷ் செதுக்கி உள்ளாராம்.

இந்த படத்தில் தளபதி விஜய் 40 வயது பம்பாயைச் சேர்ந்த கேங்ஸ்டர் ஆக நடிக்கவிருக்கிறாராம். ஆகையால் இப்படத்தில் விஜய் வேற லெவல் சம்பவம் செய்ய உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. மேலும் கிட்டதட்ட 8 மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Also Read : 60 வயசுல இப்படி ஒரு எனர்ஜியா? லோகேஷ் போட்ட ஒரே கண்டிஷனால் வெறிபிடித்து அழையும் மன்சூர் அலிகான்

தளபதி 67 படத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள பெரிய நட்சத்திர நடிகர்கள் சிலர் தேர்வாகியுள்ளனர். இந்த படத்தில் 6 வில்லன்கள் என கூறப்படுவதால் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்கவிருக்கிறார். மிஸ்கின், பிரித்விராஜ், பகத் பாசில் ஆகியோர் இப்படத்திலிருந்து பின்வாங்கி விட்டனர்.

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய தொகையை கொடுத்து நெட்ஃபிக்ஸ் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்கான வேலையில் முழு வீச்சாக செயல்பட்ட வருகிறார்.

Also Read : தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுக்கும் மிஷ்கின்.. காரணம் கேட்டு விழி பிதுங்கிய லோகேஷ்

Trending News