புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

லோகேஷின் 4 படங்களிலும் கமலின் சாயல் இருக்கும்.. இத்தன நாளா இந்த ரகசியம் தெரியாம போச்சே

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார். இவர் இயக்கிய கைதி, மாநகரம், மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட தொடர் 4 படங்கள் ஹிட்டான நிலையில், தற்போது விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணியில் இணைந்து தளபதி 67 படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பாகவே கிடத்தட்ட 500 கோடிக்கு மேல் இப்படம் ப்ரீ ரிலீஸ் வசூலாகியுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வர தொடங்கியுள்ளது. அந்த வகையில் தளபதி 67 படத்தின் கதாபாத்திரம் ஒன்று கமல் நடிப்பில் வெளியான படத்தில் வந்த கதாபாத்திரத்தை போலவே உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார்.

Also Read: சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தளபதி 67 அப்டேட்.. உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா

லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகரகாவார். 2017 ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான மாநகரம் படத்தில் நடிகர் சுதீப், ஸ்ரீ , ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருப்பர். இதில் சுதீப்பின் கதாபாத்திரம் கமலஹாசன் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா படத்தின் கமல் நடித்த கதாபாத்திரத்தை மனதில் வைத்து சுதீப்பின் கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கினாராம்.

அதே போல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரத்தை, 1994 ஆம் ஆண்டு வெளியான நம்மவர் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்கினாராம். மேலும் கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் கூட விருமாண்டி படத்தில் கமலின் ஹீரோ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்கினாராம். இப்படி இவர் இயக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கமலஹாசன் படங்களில் அவர் நடித்த கதாபாத்திரத்தை நினைத்து தான் லோகேஷ் இயக்கி வருகிறாராம்.

Also Read: ரஜினி பார்த்து மிரண்டு போன நடிப்பு அரக்கன் கமலஹாசன்.. அந்த மாதிரி 2 படங்களுக்கு இன்றுவரை ஏங்கும் ரஜினி

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கவுள்ள தளபதி 67 படத்தில், நடிகர்கள் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கதாபாத்திரம் வில்லன் என கூறப்படுகிறது . அண்மையில் இவரது புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், இவரது தளபதி 67 கதாபாத்திரத்தை, கமல் நடித்த படத்தின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்கவுள்ளாராம்.

2004 ஆம் ஆண்டு கமலஹாசன், பசுபதி, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் கமலஹாசன் முதல் பாகத்தில் ஹீரோவாகவும், இரண்டாவது பாகத்தில் பழி வாங்கும் வில்லனாகவும் நடித்திருப்பார். இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் கமலை போலவே அர்ஜுனின் கதாபாத்திரத்தை தளபதி 67 படத்தில் உருவாக்கவுள்ளதாக லோகேஷ் கூறியுள்ளார்.

Also Read: வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

Trending News