சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

லியோவால் லோகி எடுத்த அதிரடி முடிவு.. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது

Leo – Lokesh : லோகேஷ் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கும். மாஸ்டர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு விஜய் உடன் லோகேஷ் மீண்டும் இணைந்ததால் கண்டிப்பாக தாறுமாறாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

அதாவது லியோ ஸ்டைலில் முதல் பாதி இருந்தாலும் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்தது. வசூல் என்னவோ பல கோடி பார்த்ததாக அறிவிப்பு வெளியானாலும் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பது தான் நிதர்சனம். இந்த சூழலில் லோகேஷ்க்கு என்ற ஒரு ஸ்டைல் இருக்கிறது.

தன்னுடைய படங்களை கோர்வையாக எல்சியு என்ற கான்செப்டில் எடுத்து வருகிறார். அதேபோல் லியோ படமும் லோகேஷின் எல்சியுவில் இடம் பெற்றது. ஹாலிவுட் இருந்து தான் லோகேஷ் இந்த கான்செப்ட்டை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் இது இவருக்கு கை கொடுத்தாலும் லியோ நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

Also Read : நெல்சன், லோகேஷ் கதையெல்லாம் கோடு மட்டும் தான்.. 67 வயதிலும் டஃப் கொடுத்த மணிரத்தினம்

இதனால் லோகேஷ் முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறாராம். அதாவது சூடு கண்ட பூனை எப்படி அடுப்பங்கரை வராதோ அதேபோல் லியோவில் பட்ட அடியால் இனி எல்சியு கான்செப்டில் படம் எடுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதுவும் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை லோகேஷ் எடுக்க உள்ளார்.

இந்த படம் தான் அவரது கடைசி எல்சியு படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் ஒரு பத்து படம் தான் எடுக்க போகிறேன் என்பதை கூறியிருந்தார். அதில் ரஜினி படம் எல்சியுவில் இடம் பெறாது. ஆகையால் கைதி 2 வை தவிர அதன் பிறகு லோகேஷ் எல்சியுவை கைவிட இருக்கிறார்.

Also Read : மாஸ்டர்ல மிஸ்ஸான வில்லனை ரஜினிக்கு லாக் செய்த லோகேஷ்.. குருவுக்கு தண்ணி காட்ட வரும் சிஷ்யன்

Trending News