செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மொத்தமாக சுத்தலில் விட்ட லோகேஷின் LCU.. போதை, தங்க கடத்தல் ரோலக்ஸ்-க்கு தண்ணி காட்ட வரும் லியோ

LCU என்ற ஒரு கான்செப்ட்டை வைத்துக்கொண்டு புத்திசாலித்தனமாக களத்தில் குதித்திருக்கும் லோகேஷ் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற விட்டு கொண்டிருக்கிறார். கைதி திரைப்படத்தில் ஆரம்பித்து விக்ரம் மூலம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் லோகேஷ் அடுத்ததாக லியோ திரைப்படத்தின் மூலம் புது முயற்சியை கையாண்டு வருகிறார்.

தற்போது விஜய்யை வைத்து அடுத்த ப்ராஜெக்ட்டை ஆரம்பித்திருக்கும் லோகேஷ் இப்படத்தையும் முந்தைய படங்களின் தொடர்ச்சியாக தான் கொண்டுவர இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது வெளியான லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ பலரையும் மொத்தமாக குழப்பி விட்டிருக்கிறது. நேற்று தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பை ஒரு வீடியோ மூலம் பட குழு வெளியிட்டு இருந்தது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த தலைப்பு தற்போது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் அந்த வீடியோவில் இருக்கும் பல மறைமுக குறிப்புகள் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

Also read: தேடி வந்த வாய்ப்பை நழுவ விட்ட விஜய்.. கப்புனு கெட்டியா பிடித்துக் கொண்ட அஜித்

அந்த வகையில் வீடியோவில் இடம் பெற்றிருக்கும் சில விஷயங்கள் முந்தைய படங்களோடு கனெக்ட் ஆகி இருக்கிறது. அதாவது வீடியோவில் கழுகு ஒன்று பறப்பது போல் காண்பிக்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் கமல் இப்படத்தில் நிச்சயம் ஒரு ரோலில் வருகிறார் என்பது தெளிவாகி இருக்கிறது. ஏனென்றால் விக்ரம் படத்தில் கமலை இந்த கழுகுடன் தான் ஒப்பிட்டு இருப்பார்கள். அதேபோன்று வீடியோவில் பாம்பு ஒன்று ஊர்வது போலவும் காட்டப்பட்டிருக்கும்.

அதோடு ஒரு காட்சியில் விஜய்யால் அது தாக்கப்படுவது போலவும் இருக்கும். இதை வைத்து அது விஜய் சேதுபதி தான் என்று புரிகிறது. அது மட்டுமில்லாமல் இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. விக்ரம் படத்தில் சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் முதுகில் ஒரு பெரிய டாட்டூ இருக்கும். அதில் பாம்பு, கழுகு, கூர்மையான வாள் ஆகியவை இணைந்தது போன்று இருக்கும்.

Also read: லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!

இதன் மூலம் விஜய் சேதுபதி, கமல் மற்றும் விஜய்க்கு பொதுவான எதிரி என்று புரிகிறது. ஏனென்றால் லியோ படத்தில் விஜய் கையில் பெரிய கத்தி ஒன்றை வைத்தபடி இருப்பார். இது ஒரு புறம் இருக்க லியோ எப்படி ரோலக்ஸ் உடன் கனெக்ட் ஆவார் என்ற ஒரு குழப்பமும் இருக்கும். ஆனால் ரோலக்ஸ் போதை மருந்து மட்டுமல்லாமல் தங்க கடத்தல் பிசினசும் செய்கிறார் என்பதை இந்த வீடியோ மூலம் லோகேஷ் காட்டி இருக்கிறார்.

எப்படி என்றால் இதில் விஜய் சாக்லேட் செய்வது போன்று காட்டப்பட்டிருந்தாலும் அது தங்க பிஸ்கட் போன்ற ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக செல்லும் கதையில் கமல் விஜய் இருவருக்கும் பொதுவான எதிரி தான் இந்த ரோலக்ஸ். இவர்களுடன் சஞ்சய் தத், அர்ஜுன் எப்படி இணைகிறார்கள் என்பதும் மிகப்பெரிய சஸ்பென்ஸ் தான். இப்படித்தான் லோகேஷ் யுனிவர்ஸ் செல்லும் என்ற ஒரு யூகம் கிளம்பி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் படம் வெளி வந்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.

Also read: மறுபடியும் சிலுவையா.? சிவனடியார் லோகேஷை மாற்றிய ஜோசப் விஜய்

Trending News