Nelson and Lokesh: தற்போதைய சினிமா இண்டஸ்ட்ரியல் இவங்க கையில் தான் இருக்கிறது என்பதைப் போல் லோகேஷ் மற்றும் நெல்சன் உலா வருகிறார்கள். இதில் ஆரம்பத்தில் நெல்சன் படங்கள் நன்றாக இருந்தாலும் விஜய்யை வைத்து எடுத்த பீஸ்ட் படம் மக்களிடம் தோற்றுப் போய் மொக்கையான விமர்சனங்களை பெற்றது.
இந்தத் தோல்விக்கு அடுத்து நெல்சனுக்கு பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து கலாய்த்து வந்தார்கள். இந்நிலையில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை அவருடைய இயக்கத்தில் நான் நடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக ரஜினி அவருடன் கூட்டணி வைத்தார். அந்த நேரத்திலும் பலரும் இந்தப் படமும் கண்டிப்பாக ஃபெயிலியர் ஆகிவிடும் என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்து வசூலிலும் சாதனை புரிந்தார். அதன்பின் யாரெல்லாம் நெல்சனை பற்றி அவதூறாக பேசினார்களோ அவர்கள் அனைவரும் மூக்கு மேல் விரலை வைக்கும் அளவிற்கு மாஸ் இயக்குனராக பெயரெடுத்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் விஜய்க்கு மட்டும் ஒரு தோல்வி படத்தை கொடுத்துவிட்டு அப்படியே எதிர்மறையாக ரஜினி கேரியரில் மாஸ் காட்டிவிட்டார் என்று நெல்சனை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அதே மாதிரி லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லியோ படம் தற்போது வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதுல வேற ரிலீசுக்கு முன்னாடி கண்டிப்பாக 1000 கோடி வசூலை தொட்டுவிடும் என்று புரளியை கிளப்பினார்கள். ஆனால் படம் வந்த பிறகு தான் தெரியுது பாதியாவது தேறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதனால் பீஸ்ட் படத்தின் போது நெல்சன் நிலைமை எப்படி இருந்ததோ, அதே மாதிரி தற்போது லோகேஷ் நிலைமையும் இருக்கிறது.
அதாவது லியோ படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாமல் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரஜினி அவருடைய 171 ஆவது படத்தை லோகேஷ் உடன் பண்ண இருக்கிறார். அந்த வகையில் ஜெயிலர் படம் எந்த அளவிற்கு வெற்றி அடைந்ததோ அதே மாதிரி தலைவர் 171 படத்தையும் லோகேஷ் மாபெரும் வெற்றியாக்கி விடுவார். இதற்கிடையில் விஜய் இவர்கள் இருவரிடமும் சிக்கி தோல்வியை பெற்றுவிட்டார்.