ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் சன்ரைசஸ் அணிகள் மோதிய மேட்ச் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு திரும்பும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அந்தப் போட்டியில் கிட்டத்தட்ட 9.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் லக்னோ அணியை துவம்சம் செய்தனர். நாலா பக்கமும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
கொந்தளித்து கடுமையாய் விமர்சித்த சேவாக்
ஐபிஎல் வரலாற்றில் பத்து ஓவர்களுக்குள் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற முதல் அணி சன்ரைசஸ்தான்.இதனால் கடும் விரக்தி அடைந்த அந்த அணியின் முதலாளி சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கே.எல். ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு நட்சத்திர வீரரை இப்படி பேசுவது பெரும் தவறு என முன்னால் கிரிக்கெட் வீரர்கள் பலர் வசை பாடினார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றால் மற்றொரு அணி தோல்வி அடையும். இது புரியாமல் சஞ்சீவ் கோயங்கா நடந்து கொண்டது ஒத்துக்க முடியாத ஒன்று என சேவாக் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.
இப்பொழுது லக்னோ அணியின் உரிமையாளர் தான் பண்ணியது தவறு என்றும் அதற்காக கே எல் ராகுல் இடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தனது தவறை ஒத்துக் கொண்டார்.மேலும் லக்னோ அன்னிக்கு பெரிய விருந்து ஒன்றும் செய்துள்ளார் ஏற்பாடு