புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ப்ரமோஷன் பண்ணலன்னாலும் பரவால்ல, பேசாம இருங்க ஆண்டவரே.. இந்தியன் 2 தல தப்புமா.? பதட்டத்தில் லைக்கா

Indian 2: லைக்கா தயாரிப்பில் ஏழு வருட போராட்டத்தின் பலனாக இந்தியன் 2 வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இந்த தயாரிப்பில் இணைந்துள்ளது.

ஏற்கனவே சங்கர், கமல் கூட்டணியில் இந்தியன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அது குறைந்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது.

அதாவது இந்தியன் 2 படத்தை பெரிய அளவில் வெற்றியடைய வைக்க வேண்டும் என சங்கர் மற்றும் பட குழுவினர் அனைவரும் தீவிர ப்ரமோஷனில் இருக்கின்றனர். ஆண்டவரும் தன் பங்குக்கு படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்.

ஆனால் அதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. ஏனென்றால் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் இந்தியன் 2 குறித்து பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனால் ஆண்டவரோ எனக்கு இந்தியன் 3 தான் மிகவும் பிடித்திருக்கிறது என ஒரே போடாக போட்டுள்ளார்.

பிரமோஷனில் சொதப்பும் கமல்

அதேபோல் ஏ ஆர் ரகுமான் இல்லாமல் அனிருத் இசை ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு கமல் இது இயக்குனரின் முடிவு தான். நான் இளையராஜா, ஏ ஆர் ரகுமானின் தீவிர ரசிகன். வருங்காலத்தில் வேண்டுமென்றால் அனிருத் இசைக்கு ரசிகனாக மாறலாம் என கூறியிருந்தார்.

இதிலிருந்து அவர் சங்கர் மீது ஏதோ ஒரு அதிருப்தியில் இருப்பதாக தோன்றியது. மேலும் இந்தியன் 3க்கு பிறகு அடுத்தடுத்த பாகங்கள் வருமா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. உடனே கமல் இந்த படத்திற்கு விடிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து மேக்கப் போட்டு ரெடியானேன் என கூறினார்.

இதன் மூலம் இனிமேல் அடுத்தடுத்த பாகங்கள் வராது என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார். இப்படி ஆண்டவர் பேசும் விஷயங்கள் எல்லாமே இந்தியன் 2 ப்ரமோஷனுக்கு பின்னடைவாக தான் இருக்கிறது.

இதுவே லைக்காவுக்கு ஒரு வித பதட்டத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தால் பல பஞ்சாயத்துக்களை தயாரிப்பு தரப்பு சந்தித்தது. அதனால் எப்படியாவது கை மேல் பலன் பார்த்து விட வேண்டும் என அவர்கள் குறியாக இருக்கின்றனர்.

ஆனால் ஆண்டவரோ மனதில் ஏதோ வைத்துக் கொண்டு பேசி வருகிறார். ஆக மொத்தம் கமல் பிரமோஷன் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை. பேசாமல் இருந்தாலே படம் நல்ல வசூலை பெற்று விடும் என திரையுலகில் பேசி வருகின்றனர்.

இந்தியன் 2 ரிலீஸ் பதட்டத்தில் இருக்கும் லைக்கா

Trending News