இந்தியன் 2-வால் இழுத்து மூடப்படுகிறதா லைக்கா.? 500 கோடி காப்பாற்றப்பட்டதா, மொத்த வசூல் நிலவரம்

Indian 2: இந்தியன் 2 படம் வெளிவருவதற்கு முன்பு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீசான பிறகு படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அது மட்டும் இன்றி வசூலும் இறங்குமுகமாகவே இருக்கிறது.

இதனால் லைக்கா அவ்வளவுதான். பெரும் நஷ்டத்தை சந்தித்து விட்டார்கள். தயாரிப்பு கம்பெனியை இழுத்து மூட போகிறார்கள் என செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. உண்மையில் இந்தியன் 2 வசூல் நிலவரம் என்ன? லைக்காவுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை இங்கு காண்போம்.

ஆரம்பத்தில் ஒரே பாகமாக எடுக்கப்பட இருந்த இந்தியன் 2 தற்போது மூன்றாம் பாகத்திற்கும் தயாராகியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி. முதலில் 300 கோடி பட்ஜெட் போட்டு தான் படத்தை ஆரம்பித்தார்கள்.

இந்தியன் 2 பிசினஸ் ரிப்போர்ட்

ஆனால் கூடுதலாக ஒரு பாகம் இருப்பதால் இவ்வளவு செலவு ஆகியிருக்கிறது. இதில் இரண்டாம் பாகத்திற்கு மட்டுமே 250 கோடி செலவாகி இருக்கிறது. இதில் 90 சதவீதம் தற்போது எடுக்கப்பட்டு விட்டது. அதில் டிஜிட்டல் உரிமையை பொருத்தவரையில் 125 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

அந்த வகையில் இந்தியன் 2 படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. அடுத்ததாக சேட்டிலைட் உரிமை கலைஞர் டிவிக்கு 68 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா தியேட்டர் உரிமம் மூலம் 15 கோடி கிடைத்துள்ளது.

இதன் மூலமே 200 கோடி வரை கிடைத்திருக்கிறது. இது தவிர தமிழக தியேட்டர் உரிமை, ஹிந்தி டப்பிங் உரிமை, ஓவர்சீஸ் உரிமை என பல கோடிகள் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் லைக்காவுக்கு இந்தியன் 2 நிச்சயம் லாபத்தை தான் கொடுத்திருக்கிறது.

அதனால் லைக்கா தயாரிப்பை விட போகிறார்கள் என்று வரும் செய்தியில் துளி அளவும் உண்மை கிடையாது. அடுத்ததாக வேட்டையன், விடாமுயற்சி ஆகிய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படங்களும் லைக்காவுக்கு கோடி கணக்கில் லாபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியன் 2 லைக்காவுக்கு லாபமா, நஷ்டமா.?

Next Story

- Advertisement -