வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விமர்சன ரீதியாக அடிபட்டாலும் வசூல் ரீதியாக டஃப் கொடுக்கும் மாமன்னன்.. கல்லாப்பெட்டியை நிரப்பிய உதயநிதி

Maamanan Collection: இயக்குனர் மாரி செல்வராஜின் முந்தைய படங்களான கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து உதயநிதியை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய படம் தான் மாமன்னன். கடந்த வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு திட்டம் தீட்டி இருந்தார். அதாவது கமல் முன்னிலையிலேயே அவருடைய தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இசக்கி கதாபாத்திரத்தின் தாக்கத்தின் காரணமாக மாமன்னன் படம் எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

Also Read : முழு தமிழ் நடிகராக மாறிய பிரபாஸ்.. தடுத்து நிறுத்தி கல்லாவை நிரப்ப உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்

இது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் படம் வெளியான பிறகு தான் தெரிகிறது தேவர் மகன் படத்திற்கும், மாமன்னன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது. இந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக சென்ற நிலையில் 6 கோடியை தாண்டி மாமன்னன் படம் வசூல் செய்தது.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வசூல் சற்று மந்தமான நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மீண்டும் பழைய வசூலை பெற தொடங்கியது. கடந்த ஐந்து நாட்கள் முடிவில் மாமன்னன் படம் கிட்டத்தட்ட 30 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இது படக்குழுவுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : மாமன்னன் படத்தை பார்த்த வெற்றிமாறன்.. ஒத்த வரியில் கொடுத்த விமர்சனம்

ஏனென்றால் விமர்சன ரீதியாக மாமன்னன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக கோடிகளை குவித்து வருகிறது. இதற்குக் காரணம் உதயநிதியின் கடைசி படம் என்பதனால என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் படத்தில் பிளஸ் பாய்ண்டாக வடிவேலுவின் நடிப்பு அமைந்திருந்தது.

ஆகையால் இவ்வாறு வசூல் பெறுவதற்கு இவரும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இந்நிலையில் மாமன்னன் படத்தை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்த காரணத்தினால் இப்போது இந்த படத்தின் வசூல் மூலம் கல்லாப்பெட்டியை நிரப்பி வருகிறார் உதயநிதி. இன்னும் ஓரிரு தினங்களில் போட்ட பட்ஜெட்டை மாமன்னன் படக்குழு எடுத்துவிடும்.

Also Read : மாமன்னன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. உதயநிதியை ஓவர்டேக் செய்த மாரி செல்வராஜ்

Trending News