திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கமல் மீது பயங்கர க்ரஷ்.. கதை கூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்ட மாவீரன் பட நடிகை

Actor Kamal Haasan: தமிழ் சினிமாவில் பல வெற்றி நடிகர்கள் இருந்தாலும், அழகான நடிகர்கள் மற்றும் பெண் ரசிகைகளின் மனம் கவர்ந்த நடிகர்கள் என்று ஒரு சிலரே இருப்பார்கள். அந்த லிஸ்டில் 90களின் காலகட்டத்தில் இருந்த அவர்தான் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு அப்போது பெண் ரசிகைகள் ரொம்பவும் அதிகம். காதல் மன்னன் என்று ஜெமினி கணேசனை அடுத்து இவரை சொல்லும் அளவுக்கு இருந்தது. ரசிகைகள் மட்டுமல்லாமல் பல நடிகைகளும் இவருடன் நடிக்க ஆசைப்பட்டு நடித்தனர்.

அப்போதெல்லாம் கமல் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் நடிப்பது தான் நடிகைகளின் முதல் குறிக்கோளாக இருக்கும். அதிலும் கமலுடன் ரொம்பவும் விருப்பப்பட்ட நடிக்கும் நடிகைகளும் இருந்தார்கள். இதனாலேயே கமல் அன்று முதல் இன்று வரை பல காதல் சர்ச்சைகளில் சிக்கியும் இருக்கிறார். தற்போது ஒரு 90ஸ் ஹீரோயின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே படத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஆடிசன் சென்றதாக சொல்லி இருக்கிறார்.

Also Read:78 வயசு வரை நடித்த ஜாம்பவான்.. 3 தலைமுறைகளை பார்த்த கமல் பட நடிகர்

80 மற்றும் 90களின் காலகட்டத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சரிதா தான் அந்த நடிகை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் மாவீரன் திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து சரிதா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலுடன் நடித்த அனுபவத்தை பற்றி சொல்லி இருக்கிறார்.

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் மரோசரித்ரா. இந்த படத்தில் சரிதா கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரபல நிறுவனத்தால் இந்தியாவில் சிறந்த 100 படங்கள் என அறிவிக்கப்பட்ட லிஸ்டில் இந்த படமும் இருந்தது. கிட்டத்தட்ட 700 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியும் பெற்றது. இது தெலுங்கு படமாக இருந்தாலும் சென்னை உட்பட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தமிழில் மறு ஆக்கம் செய்யப்படவில்லை.

Also Read:பிக் பாஸ் சீசன் 7-க்கு கமல் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா! ஒரு படத்தோட மொத்த பட்ஜெட்

இந்த படத்தில் நடிக்க சரிதாவை அணுகிய போது, கமல்தான் ஹீரோ என்று சொன்னவுடன் படத்தின் கதை என்ன, இயக்குனர் யார் என எதுவுமே கேட்காமல் ஆடிசனில் கலந்து கொள்ள ஓகே என்று சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு அப்போது நடிகர் கமலஹாசனின் மீது சரிதாவுக்கு கிரஷ் இருந்ததாம். ஆடிசனில் கலந்து கொண்ட 106 பேரில் சரிதா தேர்வாகி இருக்கிறார்.

நடிகை சரிதா எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய திறமையான நடிகை. சினிமாவிற்கு அழகை விட திறமை அதிக முக்கியம் என நிரூபித்த நடிகைகளின் இவரும் ஒருவர். இயக்குனர் பாலச்சந்தரின் பல கதைகளின் வெற்றி நாயகியாக இவர் நடித்திருக்கிறார்.

Also Read:உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

Trending News