ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

புள்ள பூச்சி எல்லாம் அஜித்துக்கு வில்லனா.? மீண்டும் மீண்டும் சொதப்பும் மகிழ் திருமேனி

Ajith in Vidamuyarchi: எப்பவோ வயசுக்கு வர வேண்டிய பொண்ணு இப்ப வர குத்த வச்சுக்கிட்டே இருக்கு என்று சொல்வதற்கு ஏற்ப விடாமுயற்சி படம் ஆரம்பிக்கப்பட்ட தேதியிலிருந்து இப்ப வர முடிவுக்கு வராமல் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது. அந்த வகையில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது.

அதாவது இந்த மாத இறுதிக்குள் எப்படியாவது படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று மிக உறுதியாக விடாமுயற்சி படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கான வேலைகள் ஒவ்வொன்றும் தற்போது மும்மரமாக நடைபெற்று இருக்கிறது. மேலும் இதில் த்ரிஷா நடிப்பது உறுதியாகி விட்டது.

Also read: அஜித் வீட்டு சிசிடிவி கேமராவில் முகத்தை காட்டினேன்.. உதவி கிடைக்காமல் அல்லாடும் நடிகர்

அத்துடன் அஜித்துக்கு தம்பியாக பிக் பாஸ் ஆரவ் நடிக்க இருக்கிறார். இதற்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்திற்கு இரண்டு நடிகர்கள் கமிட் ஆகியிருக்கிறார்கள். அந்த இரண்டு வில்லன்களுமே விஜய்க்கு வில்லனாக நடித்தவர்கள் தான். அவர்களைத் தான் விடாமுயற்சி படத்திலும் கமிட் செய்திருக்கிறார் மகிழ்திருமேனி.

அதில் முக்கிய வில்லனாக தற்போது லியோ படத்தில் நடித்து முடித்த சஞ்சய் தத் தான் விடாமுயற்சி படத்திலும் கமிட்டாய் இருக்கிறார். அடுத்ததாக அர்ஜுன் தாசும் வில்லனாக நடிக்கப் போகிறார். ஆனால் இவர்கள் இரண்டு பேருமே பெருசாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் சொல்லும் படியான ரீச் அடையவில்லை.

Also read: அஜித்திடம் ஓவர் கறார் காட்டும் லைக்கா.. பிள்ளை பெறுவதற்கு முன் பேர் வைத்தால் கதி இதுதான்

அதனால் இவர்களுடைய வில்லன் கேரக்டர்கள் எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பது யூகிக்க முடியவில்லை. பொதுவாக ஒரு படத்திற்கு ஹீரோவை விட வில்லன் கேரக்டர் தான் கெத்தாக இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடையும். மக்களிடமும் அதிக வரவேற்பை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த விஷயத்தில் மகிழ் திருமேனி மீண்டும் சொதப்பிவிட்டார் என்பது அவர் தேர்ந்தெடுக்கும் வில்லன்களை வைத்து தெரிகிறது. இதற்கு மேலும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான வரவேற்பை கொடுப்பார்கள் என்று சந்தேகத்தை எழுப்புகிறது.

Also read: ஷாலினியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அஜித்தின் மகள்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோ

Trending News