செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

முகுந்த் வரதராஜனை கௌரவப்படுத்தும் அமரன்.. படம் எப்படி இருக்கு.? வெளிவந்த முதல் விமர்சனம்

Amaran First Review: மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக அமரன் உருவாகி இருக்கிறது. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளனர்.

நம் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இப்போது எல்லா பக்கம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே படம் தொடர்பாக வெளியான பாடல்கள் வீடியோக்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது. அதை அடுத்து நாளை படத்தின் டிரைலர் வெளிவர இருக்கிறது. இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை எழுப்பி இருக்கிறது.

அமரன் படத்தின் முதல் விமர்சனம்

இந்நிலையில் அமரன் படத்தைப் பார்த்த சென்சார் குழு தற்போது தங்களுடைய முதல் விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றனர். அதன்படி படத்தை பார்த்து பிரமித்து போன சென்சார் அதிகாரிகள் அமரன் ஃபயராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் எனவும் வாழ்த்தி இருக்கின்றனர். இதுதான் இப்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அது மட்டும் இன்றி இப்படம் நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு வாழ்நாள் பெருமை மிக்க படமாக இருக்கும். அந்த அளவுக்கு கதாபாத்திரத்திற்காக அவர் மெனக்கெட்டுள்ளார். வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்ற பெருமையையும் தட்டி தூக்கும் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -spot_img

Trending News