புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எனக்கு இருக்கு நான் காட்டுறேன், உனக்கென்ன.? பத்திரிக்கையாளரை அலற விட்ட விஜய் பட நடிகை

ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தவர் அந்த நடிகை. பார்க்க அழகாக இருக்கிறார், நன்றாகவும் நடிக்கிறார், அதன் பிறகு பல படங்களில் கமிட்டாகி தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கும் போது அப்படியே காணாமல் போய்விட்டார். சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் இவரை காண முடிந்தது.

அதுவும் அரைகுரை ஆடையோடு அவர் போட்ட போட்டோக்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உருவானது. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த போட்டோக்கள் லைக்குகள் ஏற ஏற ஆடைகள் குறைய ஆரம்பித்தது. ரசிகர்களும் நேரம் தவறாமல் மாளவிகா மோகனன் போட்டோக்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். சரி பட வாய்ப்புக்காக இப்படி செய்கிறார் என்று நகர்ந்த போது, அதன்பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக தோன்றினார்.

அந்த படத்திற்கு பிறகு இவருக்கு மிகப் பெரிய அளவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதன் பிறகு பல படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட இவர் படம் குறித்தும் தன்னுடைய நடிப்பு அனுபவம் குறித்தும் பேசியிருந்தார்.

அப்படிப் பேசும்போது மாளவிகா மோகனிடம் சில பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது நீங்கள் ஏன் சமூக வலைதளங்களில் இவ்வளவு மோசமாக கவர்ச்சியான படங்களை பகிர்ந்து வருகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டு இருக்கின்றனர். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகன் எனக்கு என்ன வயது ஆகிறது..? 60 வயதா ஆகிறது? இந்த வயதில் கவர்ச்சி காட்டாமல் வேறு எந்த வயதில் நான் கவர்ச்சி காட்டுவது என்று அந்த கேள்விக்கு பதிலளித்து ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிர வைத்தார்.

இதனால் வாயடைத்துப் போன பத்திரிக்கையாளர் அடுத்து என்ன கேள்வி கேட்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி போனார். அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் மாளவிகா மோகன் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் தீயாக பரவி வருகிறது.

இந்த தகவலை அறிந்த பல சினிமா ரசிகர்கள் நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள் அதெல்லாம் பரவாயில்லை ஆனா கவர்ச்சி என்ற பெயரில் கேவலமான புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காதீர்கள் என்பது போல பல கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Trending News