புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இதெல்லாம் ஒரு பீலிங்கா.. மாளவிகா மோகனுக்கு போன் செய்து மொக்க போட்ட அனிருத்

தமிழ் சினிமாவில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அண்மையில் தனுஷுக்கு ஜோடியாகும் மாறன் படத்தில் மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

ஆனால் மாறன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மாறன் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானதால் படத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. மாளவிகா மோகன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

அதில் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாளவிகா மோகன் தமிழைத் தொடர்ந்து கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா நடித்ததன் மூலம் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும், இவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதேபோல் மாளவிகா மோகனுக்கும் மாஸ்டர் படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகும் நிலையில் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அப்போது அனிருத், மாளவிகா மோகனுக்கு போன் கால் பண்ணி பேசி உள்ளார். அதில் என்ன இப்படி ஆயிடுச்சு, எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் பழையபடி பட வேலைகளை பார்க்க வேண்டும் என மாளவிகா மோகனிடம் அனிருத் பீல் பண்ணி பேசி உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாளவிகா மோகன் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

Trending News